ஆஸ்கர் தகுதி பட்டியலில் கீர்த்தி சுரேஷ் திரைப்படம்!  

  • IndiaGlitz, [Friday,January 21 2022]

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் உடன் கீர்த்தி சுரேஷ் நடித்த திரைப்படம் ஆஸ்கர் தகுதிப் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரபல இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால், அர்ஜுன், சுனில் ஷெட்டி, பிரபு, கீர்த்தி சுரேஷ், மஞ்சுவாரியர், நெடுமுடி வேணு உள்பட பலர் நடித்த திரைப்படம் ‘மரைக்கர்’. இந்த படம் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்பட இந்தியாவின் பல மொழிகளில் கடந்த டிசம்பர் மாதம் வெளியானது என்பதும் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ‘மரைக்கர்’ திரைப்படம் ஆஸ்கர் தகுதிப் பட்டியலில் இடம் பிடித்து சாதனை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் மோகன்லால் மற்றும் கீர்த்தி சுரேஷ் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்கர் தகுதி பட்டியலில் இடம்பெற்றுள்ள ‘மரைக்கர்’ ஆஸ்கர் விருதையும் வெல்லுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.