சூர்யா படத்தில் பிரதமராக நடிக்கும் பிரபல நடிகர்?

  • IndiaGlitz, [Saturday,October 06 2018]

சூர்யா நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கி வரும் திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் இந்த படத்தில் பிரதமராக ஒரு பிரபல நடிகர் நடித்திருக்கும் செய்தியும் அதுகுறித்த புகைப்படமும் வெளிவந்துள்ளது.

சூர்யாவின் அடுத்த படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடித்து வருவது தெரிந்ததே. இந்த படத்தில் அவர் பிரதமராக நடிப்பதாக கூறப்படுகிறது. சற்றுமுன் இந்த படத்தின் மோகன்லால் கெட்டப் குறித்த புகைப்படம் வெளிவந்துள்ளது. இந்த கெட்டடப்பில் இருந்து அவர் பிரதமராக நடித்து வருவதாக தெரிகிறது. இருப்பினும் இந்த தகவலை படக்குழுவினர் உறுதி செய்யவில்லை.

சூர்யா, மோகன்லால், ஆர்யா, சிராஜ் ஜானி, சாயிஷா, சமுத்திரக்கனி, பொமன் இராஅனி உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை லைகா நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது. இந்த படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார்.

More News

ரஜினி பாடலுக்கு நடனமாடும் நித்யானந்தா சிஷ்யைகள்

நித்தியானந்தா குறித்த சர்ச்சைக்குரிய செய்திகள் வெளியாகி வருவது தெரிந்ததே. சமீபத்தில் கூட ஆடு, மாடு உள்ளிட்ட விலங்குகளை தமிழில் பேச வைக்கும் சாப்ட்வேர் கண்டுபிடித்திருப்பதாக நித்யானந்தா கூறினார்.

விஜய்சேதுபதியின் 'சூப்பர் டீலக்ஸ்' ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு

'செக்க சிவந்த வானம்' , '96' என அடுத்தடுத்த விஜய்சேதுபதியின் படங்கள் வெற்றி பெற்று வருவது அவருக்கும் அவருடைய ரசிகர்களுக்கும் பெரும் உற்சாகத்தை கொடுத்துள்ளது.

காலையில் நீதிபதி, மாலையில் மனைவி: ஒரே நாளில் தற்கொலை செய்து கொண்ட தம்பதிகள்

ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதியில் ஒரே நாளில் ஓய்வு பெற்ற நீதிபதியும் அவரது மனைவியும் ரயில் முன் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குரங்குக்கு டிரைவிங் கற்றுக்கொடுத்த டிரைவர் சஸ்பெண்ட்

ஒரு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் உயிர்கள் அந்த பேருந்தின் டிரைவர் கையில்தான் இருக்கும். அந்த பொருப்பை உணர்ந்து டிரைவர்கள் தனது பணியை செய்ய வேண்டும்

திருப்பரங்குன்றம்-திருவாரூர் இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவினால் காலியான திருவாரூர் தொகுதிக்கும், ஏ.கே.போஸ் மறைவினால் காலியான திருப்பரங்குன்றம் தொகுதிக்கும் விரைவில் தேர்தல் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.