மோகன்ஜி படத்தை தடை செய்ய வேண்டும்.....! சிறுபான்மை மக்கள்நல கட்சியினர் புகார்....!
Send us your feedback to audioarticles@vaarta.com
இயக்குனர் மோகன் ஜி-யின் ருத்ரதாண்டவம் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என, டிஜிபி அலுவலகத்தில் சிறுபான்மை மக்கள்நல கட்சியினர் புகார் அளித்துள்ளனர்.
திரௌபதி என்ற அறிமுகப்படம் மூலம் தமிழ்சினிமாவில் இயக்குனராக கால் பதித்தவர் தான் மோகன்ஜி. இத்திரைப்படம் ஏகப்பட்ட சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியாகி, அதன்பின்பும் ஊடகங்களில் பரபரப்பை கிளப்பியது. இந்தநிலையில் மோகன் "ருத்ரதாண்டவம்" என்ற புதிய திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதில் ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாகவும், தர்ஷா குப்தா கதாநாயகியாகவும், இயக்குநர் கெளதம் மேனன், ராதாரவி போன்ற நட்சத்திரங்கள் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். இப்படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளியான நிலையில் ஊடகங்களில் சற்று சர்ச்சையை கிளப்பியுள்ளது.
"ருத்ரதாண்டவம் படம் கிறிஸ்துவ மதத்தினர் குறித்து தவறாக சித்தரிக்கப்பட்டதாகவும், மதக்கலவரத்தை தூண்டும் வகையில் இருப்பதாகவும் உள்ளது. அதனால் இப்படத்தை தடை செய்து, இயக்குனர் மோகன் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்று சிறுபான்மை மக்கள்நல கட்சியினர் சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
DhanaLakshmi
Contact at support@indiaglitz.com
Comments