என்னுடைய சூப்பர் ஹீரோ உங்கள் தந்தை தான்: நடிகைக்கு நன்றி கூறிய சூர்யா!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூர்யா நடித்த ’சூரரைப் போற்று’ திரைப்படம் நேற்று ஓடிடியில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் உள்பட நான்கு தென்னிந்திய மொழிகளில் வெளியாகியுள்ள இந்த படத்திற்கு அனைத்து மாநிலங்களிலிருந்தும் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருவதை அடுத்து இந்த படம் மிகப் பெரிய வெற்றி படமாக கருதப்படுகிறது.
இந்த நிலையில் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் ஒன்று நடித்திருந்த மோகன்பாபுவின் மகள் லட்சுமி மஞ்சு தனது டுவிட்டர் பக்கத்தில் ’சூரரைப்போற்று’ படத்திற்கு தனது வாழ்த்தினை கூறியுள்ளார். இந்த படத்தை பார்த்த பிறகு சூர்யாவின் மீதான அன்பு மற்றும் மரியாதை எனக்கு பல மடங்கு அதிகரித்துள்ளது என்றும், நீங்கள் உங்களுடைய திறமையை மீண்டும் ஒருமுறை நிரூபித்து விட்டார்கள் என்றும் கூறியுள்ளார் இந்த படத்தை பார்த்த பின்னர் சுதா கொங்கரா மீது எனக்கு மிகப்பெரிய மரியாதை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் என் தந்தை இந்த படத்தில் பார்ப்பதற்கு மிகவும் அழகாக உள்ளார் என்றும் உங்கள் இருவரையும் ஒரே படத்தில் பார்த்தது எனக்கு மிக்க மகிழ்ச்சி’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
லட்சுமி மஞ்சுவின் இந்தக் டுவீட்டிற்கு பதிலளித்த சூர்யா ’சூரரை போற்று’ படப்பிடிப்பின்போது உங்கள் தந்தையுடன் நடித்தது ஒரு சூப்பர் ஹீரோவுடன் நடித்தது போன்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது என்றும், தெலுங்கு திரையுலக ரசிகர்களிடம் இருந்து கிடைத்துள்ள மிகப் பெரிய அன்பு என்னை நெகிழ வைத்து உள்ளது என்றும் சூர்யா குறிப்பிட்டுள்ளார்.
.@LakshmiManchu felt the aura of a SUPERHERO while shooting with Nana! @themohanbabu ... The love we are getting from all over and also from the lovely Telugu audience is huge and heart warming!!! https://t.co/D0KBDACCcc
— Suriya Sivakumar (@Suriya_offl) November 13, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments