close
Choose your channels

மோகன்லால் நடித்த தமிழ்ப்படத்தின் ரிலீஸ் தேதி

Monday, July 18, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு என மூன்று மொழிகளில் மோகன்லால் நடிப்பில் உருவாகி வந்த திரைப்படம் தற்போது ரிலீஸ் கட்டத்தை நெருங்கியுள்ளது. மலையாளத்தில் 'விஸ்மயம்' என்ற பெயரில் தயாராகி வந்த இந்த படம் தமிழில் 'நமது', என்ற டைட்டிலில் டப் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் இந்த படம் தெலுங்கிலும் ரிலீஸ் ஆகவுள்ளது.
மோகன்லாலுக்கு ஜோடியாக கவுதமி நடித்துள்ள இந்த படத்தில் ஊர்வசி, எஸ்.பி.பாலசுப்பிரமணியம், நெடுமுடிவேணு, நாசர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சந்திரசேகர் இயக்கியுள்ள இந்த படம் மூன்று மொழிகளிலும் வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.
மோகன்லால் நடித்த 'த்ரிஷ்யம்' படத்தின் தமிழ் ரீமேக் படமான 'பாபநாசம்' படத்திற்கு பின்னர் கவுதமி நடிக்கும் படம் இதுதான் என்பதும், இதற்கு முன்னர் மணிரத்னம் இயக்கிய 'இருவர்' படத்தில் மோகன்லால் - கவுதமி இணைந்து நடித்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment