இவன போடவாடா இத்தனை பேரு? மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் செம டீசர்!

  • IndiaGlitz, [Friday,April 15 2022]

கடந்த 90 களில் பல வெற்றி படங்களில் நடித்த நடிகர் மோகன் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் நடிக்கும் ‘ஹரா’ என்ற திரைப்படத்தை இயக்குனர் விஜய் ஸ்ரீ இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த படத்தின் டீஸர் சற்று முன் வெளியாகி உள்ளது. ஆட்டோவில் வந்து இறங்கும் மோகனை ரவுடிகள் சிலர் சூழ்ந்துகொண்டு கொலை செய்ய முயற்சிக்கின்றனர். அப்போது ரவுடிகளின் தலைவன் இவனப்போடவடா இத்தனை பேரு? என்று கூறி ஒருவனை கொலை செய்ய அனுப்புகிறார். அந்த ரவுடி மோகனை கத்தியால் குத்த வரும்போது திடீரென ரவுடிகளின் தலைவன் தீப்பிடித்து எரிகிறார். அவர் எதனால் தீப்பிடித்து எரிகிறார் என்பதை டீசரில் உள்ள மற்ற காட்சிகள் விளக்குகின்றன.

கிட்டதட்ட மூன்று நிமிடங்கள் ஓடும் இந்த டீஸரில் ஒரு வார்த்தைகூட வசனம் பேசாமல் கண்களின் மூலமே தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி இருக்கும் மோகன், இந்த படத்தின் மூலம் மாஸாக ரீ என்ட்ரி ஆகி உள்ளார் என்பது தெரிகிறது. இந்த படத்தில் நடிகை குஷ்பு ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'ஜெண்டில்மேன் 2' படத்தில் நயன்தாராவை அடுத்து இணைந்த இன்னொரு நடிகை!

கடந்த 1991 ஆம் ஆண்டு வெளிவந்த பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் முதல் படமான 'ஜென்டில்மேன்' படத்தின் இரண்டாம் பாகம் குறித்து அறிவிப்பை சமீபத்தில் பிரபல தயாரிப்பாளர் கேடி குஞ்சுமோன்

இன்று முதல் தமிழகத்தில் மீன்பிடிக்க தடை: அதிரடி உத்தரவு

இன்று முதல் 61 நாட்களுக்கு தமிழகத்தில் மீன் பிடிக்க தடை என அறிவிக்கப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

அருண்விஜய்யின் 'யானை' ரிலீஸ் தேதி திடீர் மாற்றம்: என்ன காரணம்?

அருண் விஜய் நடித்த 'யானை' திரைப்படம் மே 6ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது ஒரு மாதம் தள்ளி வைக்கப்பட்டு உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்

நயன், சமந்தாவுடன் கலர்ஃபுல் ஆட்டம்: 'காத்துவாக்குல ரெண்டு காதல்' வீடியோ!

நயன்தாரா மற்றும் சமந்தாவுடன் விஜய் சேதுபதி செம ஆட்டம் ஆடும் 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தின் பாடல் வீடியோ சற்றுமுன் வெளியாகியுள்ள நிலையில் இந்த வீடியோ இணையதளங்களில்

சரத்குமாரின் கேரக்டர் இதுவா?  'தளபதி 66' படம் குறித்த ஒரு ஆச்சரிய தகவல்

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 'தளபதி 66' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது என்பதை ஏற்கனவே பார்த்தோம். மேலும் இந்த படத்தில் சரத்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கவிருக்கிறார் என்பதும்