இவன போடவாடா இத்தனை பேரு? மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் செம டீசர்!

  • IndiaGlitz, [Friday,April 15 2022]

கடந்த 90 களில் பல வெற்றி படங்களில் நடித்த நடிகர் மோகன் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் நடிக்கும் ‘ஹரா’ என்ற திரைப்படத்தை இயக்குனர் விஜய் ஸ்ரீ இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த படத்தின் டீஸர் சற்று முன் வெளியாகி உள்ளது. ஆட்டோவில் வந்து இறங்கும் மோகனை ரவுடிகள் சிலர் சூழ்ந்துகொண்டு கொலை செய்ய முயற்சிக்கின்றனர். அப்போது ரவுடிகளின் தலைவன் இவனப்போடவடா இத்தனை பேரு? என்று கூறி ஒருவனை கொலை செய்ய அனுப்புகிறார். அந்த ரவுடி மோகனை கத்தியால் குத்த வரும்போது திடீரென ரவுடிகளின் தலைவன் தீப்பிடித்து எரிகிறார். அவர் எதனால் தீப்பிடித்து எரிகிறார் என்பதை டீசரில் உள்ள மற்ற காட்சிகள் விளக்குகின்றன.

கிட்டதட்ட மூன்று நிமிடங்கள் ஓடும் இந்த டீஸரில் ஒரு வார்த்தைகூட வசனம் பேசாமல் கண்களின் மூலமே தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி இருக்கும் மோகன், இந்த படத்தின் மூலம் மாஸாக ரீ என்ட்ரி ஆகி உள்ளார் என்பது தெரிகிறது. இந்த படத்தில் நடிகை குஷ்பு ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.