அப்பான்னு கூப்பிட்டது தப்பா? மோகன் வைத்யாவுக்கு குவியும் கண்டனங்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் தர்ஷன் மற்றும் லாஸ்லியா இருவரும் இலங்கைத்தமிழர்கள் என்று தெரிந்ததே. அதிலும் நேற்று தர்ஷன் தனது வீட்டின் சோகக்கதையை கூறியபோது அப்பாவின் மீது தான் வைத்திருந்த அன்பையும், அப்பா தங்களுக்காக பட்ட கஷ்டங்களையும் கூறினார்.
இந்த நிலையில் இன்று பிக்பாஸ் வீட்டில் உள்ள அனைவரும் ஒன்றாக பேசி கொண்டிருந்தபோது தர்ஷன், மோகன் வைத்யாவை 'அப்பா' என்று தர்ஷன் கூப்பிட்டார். உடனே மோகன் வைத்யா, 'இனிமேல் என்னை அப்பா என்று கூப்பிடாதே, அங்கிள் என்றே கூப்பிடு' என்று கூற அதனை அனைவரும் கண்டித்தனர். குறிப்பாக சாண்டி, மோகன் வைத்யா மீது தனது கடும் அதிருப்தியை தெரிவித்தார்.
இந்த நிலையில் எங்கு சண்டை நடந்தாலும் சமாதனம் செய்ய முதல் ஆளாக கிளம்பிவிடும் பாத்திமாபாபு, 'அந்த புள்ள எந்தமாதிரியான பேக்ரவுண்டில் இருந்து வந்திருக்கின்றான் என்பதை புரிந்து கொள்ளாமல் இருக்கின்றீர்களே. அவன் உங்களை அப்பா என்று ஆத்மார்த்தமாக கூப்பிட்டான்' என்று அறிவுரை கூறுகின்றார். மொத்தத்தில் இந்த புரமோ மூலம் மோகன் வைத்யாவின் இமேஜை பிக்பாஸ் உடைத்துவிட்டதால் இந்த வாரம் வெளியேறும் படலம் இருந்தால் அவர் வெளியேறுவது உறுதியாகிறது
#Day5 #Promo2 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil - தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/HJcpgssclf
— Vijay Television (@vijaytelevision) June 28, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments