எனக்கு யாருமே இல்லை: கதறி அழும் மோகன் வைத்யா!

பிக்பாஸ் நிகழ்ச்சியை எப்படியாவது முதல் நாளில் இருந்து 100வது நாள் வரை பரபரப்பாக கொண்டு செல்ல வேண்டும் என்று திட்டமிடும் பிக்பாஸ் திரைக்கதை குழுவினர் அதற்கேற்ப வகையில் எதிர்பார்ப்பை ஏற்படும் புரமோவையும் வெளியிட்டு வருகின்றனர்.

இன்று காலை சாக்சிக்கு பொங்கல் வைத்த வனிதாவின் வீடியோவை வெளியிட்ட பிக்பாஸ் குழுவினர் தற்போது பெண்களை கவரும் செண்டிமெண்ட்டை கையில் எடுத்துள்ளனர். மோகன் வைத்யா கதறி அழும் காட்சி சற்றுமுன் வெளியான புரமோவில் உள்ளது. எனக்கென்று யாருமே இல்லை. என் கஷ்டத்தை சொல்லி அழக்கூட எனக்கு மனுஷர்கள் கிடையாது. இதற்காகத்தான் நான் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்தேன். இதில் இருந்தாவது எனக்கு ஒரு குடும்பம் கிடைக்காதா? என்ற ஏக்கம் எனக்கு உள்ளது' என்று கண்ணீருடன் கதறியழுதவாறு மோகன் வைத்யா கூறுகிறார். இவருடைய உணர்ச்சிப்பெருக்கு வையாபுரியை ஞாபகப்படுத்துகிறது.

முதல் நாளில் சாண்டியுடன் குத்தாட்டம் போட்ட மோகன் வைத்யா, இரண்டாவது நாளே எமோஷன் ஆகியிருப்பது பிக்பாஸ் திரைக்கதையில் ஓட்டை இருப்பது போல் தெரிகிறது. இந்த வீடியோவை பார்த்த பலருக்கு மோகன் வைத்யாவின் குடும்ப பின்னணி என்ன? என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டிருக்கும் என்றாலும் நம்பும்படியாக திரைக்கதை அமைப்பதில் பிக்பாஸ் குழுவினர் இன்னும் கவனத்துடன் இருக்க வேண்டும் என்பதும் முக்கியமானது.

More News

விஜய்சேதுபதி படத்தில் இருந்து வெளியேறிய அமலாபால்! உள்ளே வந்த சிம்பு பட நடிகை!

விஜய்சேதுபதி நடிக்கவிருக்கும் 33வது படத்தை வெங்கடகிருஷ்ண யோக்நாத் இயக்கவிருப்பதாகவும் இந்த படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக அமலாபால்

அடுத்த ஓவியா-ஆரவ்வா அபிராமி-கவின்?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் பாகத்தில் ஓவியா-ஆரவ் காதலும், பிக்பாஸ் இரண்டாம் பாகத்தில் மகத்-யாஷிகா காதலும் பார்வையாளர்களுக்கு சுவாரஸ்யத்தை கொடுத்தது.

சாக்சிக்கு பொங்கல் வைத்த வனிதா!

பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் ஆரம்பத்தில் 'ஆனந்தம்' மம்முட்டி குடும்பம் போல் ஒற்றுமையாக இருப்பதும் போகப்போக 'சம்சாரம் அது மின்சாரம்' விசு குடும்பம் போல் ரணகளமாவது வழக்கமான ஒன்றே

பார்த்திபனின் 'ஒத்த செருப்பு' சென்சார் தகவல்கள்

உலகிலேயே ஒரு படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் மட்டுமே நடித்த ஒரு திரைப்படம் என்றால் அது 'ஒத்த செருப்பு' திரைப்படம்தான். இத்தகைய பெருமை

குஷ்பு வீட்டருகே நின்ற மர்ம டிரக்: அதிரடி நடவடிக்கை எடுத்த போலீசார்

தனது வீட்டின் அருகே மர்ம டிரக் ஒன்று கடந்த 10 நாட்களாக நிற்பதாகவும், அந்த டிரைக்கில் நம்பர் பிளேட் கூட இல்லை என்றும் நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பு