மைக் மோகன் ரீஎண்ட்ரியாகும் படத்தின் ஆச்சரியமான தகவல்
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த 90களில் காலத்தால் அழியாத பல காதல் திரைப்படங்களில் நடித்த மைக் மோகன் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் ’ஹரா’ என்ற திரைப்படத்தில் நடிக்க இருப்பதாகவும் அவர் ரீஎண்ட்ரியாகும் திரைப்படத்தை விஜய் ஸ்ரீ இயக்க இருப்பதாக வெளியான தகவலை ஏற்கனவே பார்த்தோம்.
இந்நிலையில் இந்த படம் குறித்த சில ஆச்சரியமான தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல்கட்டமாக இந்த படம் ஒரு அதிரடி ஆக்ஷன் படம் என்று தகவல் வெளியாகியுள்ளது. பெரும்பாலான படங்களில் காதல் கேரக்டரில் மோகன் நடித்து இருந்தாலும், ‘நூறாவது நாள்’, ‘24 மணி நேரம்’ போன்ற ஆக்ஷன் படங்களில் மோகன் நடித்துள்ள நிலையில் தற்போது ரீஎண்ட்ரி ஆகும் படத்தையும் ஆக்ஷன் படமாக மோகன் தேர்வு செய்துள்ளார்.
இந்த படத்தில் மோகன் ஒரு பெண்ணுக்கு தந்தை கேரக்டரில் நடித்திருப்பதாகவும், தந்தை மகள் சென்டிமென்ட் இந்த படத்தில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் 20 நிமிட காட்சிகளில் மட்டும் 90 களில் பார்த்த மோகன் போன்ற தோற்றத்தில் அவர் வர இருப்பதாகவும் இந்த காட்சிகள் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருக்கும் என்றும் இயக்குனர் விஜய் ஸ்ரீ தெரிவித்துள்ளார் .
இந்த படத்திற்காக உடல் எடையை மோகன் குறைத்து கேரக்டருக்கு சரியாக பொருத்தமாக இருப்பதாகவும், இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தற்போது நடைபெற்று வருவதாகவும் அடுத்தகட்ட படப்பிடிப்பு கோவையில் நடைபெற இருப்பதாகவும் இயக்குனர் விஜய்ஸ்ரீ தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments