'விஜய் 61' படத்தின் இயக்குனர்?
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் வெளியான திரைப்படங்களில் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படங்களில் ஒன்று 'ஜெயம் சகோதரர்களின் தனி ஒருவன்' என்பது குறிப்பிடத்தக்கது. ஜெயம் ராஜாவின் நேர்த்தியான இயக்கம், வலுவான திரைக்கதை, ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்தசாமி ஆகியோர்களின் அபாரமான நடிப்பு ஆகியவை இந்த படத்தின் வெற்றிக்கு காரணம் என்பது அனைவரும் அறிந்ததே.
மேலும் 'தனி ஒருவன்' படம் ரிலீஸ் ஆனதும் முதல் ஆளாக ஜெயம் ராஜாவை தொலைபேசியில் பாராட்டியது இளையதளபதி விஜய் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் சமீபத்தில் ஜெயம் ராஜா கூறிய ஒன்லைன் கதை ஒன்று இளையதளபதியை மிகவும் கவர்ந்ததாகவும், இதனால் 'வேலாயுதம்' படத்தை அடுத்து ஜெயம் ராஜா இயக்கத்தில் மீண்டும் விஜய் விரைவில் நடிப்பார் என்றும் கூறப்படுகிறது.
தற்போது அட்லி இயகக்த்தில் 'விஜய் 59' படத்தில் நடித்து வரும் விஜய், அடுத்து எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் 'விஜய் 60' படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் 'விஜய் 61' படத்தை ஜெயம் ராஜா இயக்குவார் என கூறப்படுகிறது. ஜெயம் ராஜா தற்போது 'தனி ஒருவன்' திரைப்படத்தை இந்தியில் ரீமேக் செய்யும் பணியில் தீவிரமாக உள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout