அரவிந்த்சாமிக்கு மட்டும் தானா, எனக்கும் மரியாதை தர வேண்டும்.. ரசிகரின் பதிவுக்கு மோகன்ராஜா பதில்..!

  • IndiaGlitz, [Monday,December 25 2023]

தமிழ் திரையுலகின் புத்திசாலித்தனமான வில்லன் கேரக்டர் ’தனி ஒருவன்’ படத்தில் நடித்த அரவிந்த்சாமியின் சித்தார்த் அபிமன்யு கேரக்டர் என்று ரசிகர் ஒருவர் செய்த பதிவுக்கு அந்த கேரக்டரை உருவாக்கிய தனக்கும் மரியாதை தரவேண்டும் என்று ஜாலியாக கமெண்ட் இயக்குனர் மோகன்ராஜா செய்துள்ளார்.

மோகன் ராஜா இயக்கத்தில் உருவான ’தனி ஒருவன்’ என்ற திரைப்படம் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியானது. ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்த்சாமி உள்ளிட்டோர் நடித்த இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடைந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்து அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. விரைவில் ’தனி ஒருவன் 2’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ரசிகர் ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் மருத்துவமனையில் ஜெயம்ரவியை அரவிந்த் சாமியால் எளிதில் கொன்று இருக்க முடியும். ஆனால் அவர் ஜெயம் ரவியின் புத்திசாலித்தனத்துடன் மோத விரும்பியதால் அவனுடன் விளையாட முடிவெடுக்கிறான்.

மித்ரன் இடம் எஸ்டி கார்டு கொடுக்காமலே அவனை சாகடித்து இருக்க முடியும். ஆனால் மித்ரன் போட்டியில் வென்றதாக வில்லன் நினைத்ததால் அந்த பரிசை கொடுத்தான். தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த வில்லன் சித்தார்த் அபிமன்யு என்ற பதிவு செய்திருந்தார்.

இந்த பதிவுக்கு பதில் அளித்துள்ள மோகன் ராஜா ’வில்லன் கேரக்டரை மட்டும் பாராட்டினால் பத்தாது, அந்த வில்லன் கேரக்டரை உருவாக்கிய எழுத்தாளர்களுக்கும் மரியாதை தர வேண்டும், அதுதான் சட்டப்படி சரியானது’ என்று ஜாலியாக பதில் அளித்துள்ளார். மோகன் ராஜாவின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.