சிரஞ்சீவியின் அடுத்த படத்தை இயக்கும் பிரபல தமிழ் இயக்குனர்
Send us your feedback to audioarticles@vaarta.com
’ஜெயம்’ என்ற படத்தில் இயக்குனராக அறிமுகமாகி அதன் பின்னர் ’தனி ஒருவன்’ ’வேலைக்காரன்’ உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் மோகன்ராஜா என்பது தெரிந்ததே. இவர் தற்போது ஜெயம்ரவி நடித்திருக்கும் ’தனிஒருவன் 2’ படத்தின் பணிகளை செய்து வருவதாக கூறப்பட்டது
இந்த நிலையில் திடீரென அவர் சிரஞ்சீவி நடிக்கும் அடுத்த படத்தை இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிரஞ்சீவியின் 153வது படத்தை இயக்குவதற்கு தனக்கு வாய்ப்பு கிடைத்ததற்கு நன்றி. என்னுடைய பெற்றோர்கள் மற்றும் நலவிரும்பிகளின் ஆசியால் தான் இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது என்று மோகன் ராஜா தனது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார்
இந்த படம் மலையாளத்தில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற ’லூசிஃபர்’ படத்தின் தெலுங்கு ரீமேக் என்பதும் மோகன்லால் நடித்த கேரக்டரில் சிரஞ்சீவி நடிக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் அடுத்த ஆண்டு இறுதியில் இந்த படம் ரிலீசாகும் என்றும் கூறப்படுகிறது
இந்த நிலையில் தற்போது சிரஞ்சீவி ’ஆச்சாரியா’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் அந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதிக்குள் முடிந்துவிடும் என்பதும் குறிப்பிடத்தக்கது
With the blessings of my parents and well wishers, life has always gifted me better and bigger things.
— Mohan Raja (@jayam_mohanraja) December 16, 2020
And this time I’m more elated n honored to direct a mega project with the Megastar @KChiruTweets himself ????
Need all your wishes n prayers ?? #MegaStar153 pic.twitter.com/eJ05j2ia7v
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout