சிவாஜி கணேசன் - மோகன்லால் படத்தின் ரிலீஸ் தேதி

  • IndiaGlitz, [Tuesday,July 19 2016]

கடந்த 1997ஆம் ஆண்டு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த மலையாள திரைப்படம் 'ஒரு யாத்ரா மொழி. மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுடன் சிவாஜி கணேசன் நடித்த இந்த படம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படம் தற்போது தமிழில் டப் ஆகி விரைவில் ரிலீஸ் ஆகவுள்ளது.
நாளை மறுநாள் அதாவது ஜூலை 21ஆம் தேதி சிவாஜிகணேசனின் நினைவு தினத்தன்று இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்திற்கு தமிழில் 'பயணத்தின் மொழி' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
தந்தை-மகன் செண்டிமெண்ட் காட்சிகள் அதிகமுள்ள இந்த படத்தில் சிவாஜிகணேசன், மோகன்லாலுடன் ரஞ்சிதா, நெடுமுடிவேணு, சோமன், பிரகாஷ்ராஜ் திலகன் உள்பட பலர் நடித்துள்ளனர். பிரபல இயக்குனர் பிரதாப்போத்தன் இயக்கியுள்ள இந்த படத்தின் கதையை பிரியதர்ஷன் எழுதியுள்ளார். இசைஞானி இளையராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.