என்னங்கடா இப்படி அநியாயம் பண்றிங்க.. போதும் நிறுத்துங்க.. இயக்குனர் மோகன் ஜி ட்விட்..!

  • IndiaGlitz, [Monday,July 31 2023]

இயக்குனர் மோகன் ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் ’என்னங்கடா இப்படி அநியாயம் பண்றிங்க, போதும் நிறுத்துங்க’ என்று பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் வெளியான மாரி செல்வராஜின் ’மாமன்னன்’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது என்பதும் இந்த படம் நல்ல வசூலை பெற்றது என்பது தெரிந்ததே. ஆனால் இந்த படத்தில் வில்லனாக பகத் பாசிலை மாரி செல்வராஜ் காட்டியிருக்க நெட்டிசன்கள் அதற்கு நேர் எதிராக அவரை ஹீரோவாக்கி அவருடைய காட்சிகளை எடிட் செய்து பின்னணியில் பல ஜாதி பெருமைகள் பேசும் பாடல்களை இணைத்து இணையதளத்தில் வைரல் ஆக்கி வருகின்றனர். இதில் ’போற்றி பாடடி பெண்ணே’ என்ற ’தேவர் மகன்’ பாடலும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இது மிகப்பெரிய அளவில் இணையதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் இயக்குனர் மோகன் ஜி ’என்னங்கடா இப்படி அநியாயம் பண்றிங்க, போதும் நிறுத்துங்க’ என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவுக்கு ‘மாமன்னன்’ மீம்ஸ் வீடியோக்கள் கமெண்ட்கள் பதிவாகி வரும் நிலையில் இந்த பதிவுக்கு அவர் அடுத்த சில மணி நேரங்களில் விளக்கமும் கொடுத்துள்ளார்.

இது நெய்வேலி என்எல்சி நிர்வாகத்திற்காக போட்ட பதிவு என்றும் படத்தை போடாமல் பதிவு போட்டதால் இப்படி மாத்தி விட்டுட்டீங்களே என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். உண்மையிலேயே அவர் நெய்வேலி பிரச்சனைக்காக போட்டாரா? அல்லது மாமன்னன் மீம்ஸ்களுக்காக போட்டாரா? என்பது அவரது மனசாட்சிக்கு மட்டுமே தெரியும் என்று நெட்டிசன்கள் கமெண்ட் பதிவு செய்து வருகின்றனர்.