அஜித்தின் 'ஏகே 61' படத்தயாரிப்பாளருக்கு இயக்குனர் மோகன் ஜி வைத்த வேண்டுகோள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
அஜித் நடித்துவரும் ‘ஏகே 61’ படத்தின் தயாரிப்பாளர் போனி கபூருக்கு ’பகாசூரன்’ என்ற படத்தை இயக்கி வரும் மோகன் ஜி கோரிக்கை ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
மோகன் ஜி இயக்கத்தில் செல்வராகவன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ’பகாசூரன்’. இந்த படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் இன்று மாலை 5.30 மணிக்கு இந்த படத்தின் சிங்கிள் பாடல் ரிலீஸ் ஆகவுள்ளது.
சிவ சிவாயம்’ என்ற இந்த பாடலை சாம் சிஎஸ் கம்போஸ் செய்துள்ளார் என்பதும் இந்த பாடலின் கிளிம்ப்ச் வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அஜீத் நடித்து வரும் ‘ஏகே 61’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில் இயக்குனர் மோகன் ஜி தனது டுவிட்டர் பக்கத்தில், ‘ஏகே 61’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியீடு எப்போது என்று சொல்லுங்கள் போனிகபூர் சார், அதன்படி நானும் எனது ‘சிவ சிவாயம் பாடல் ரிலீஸ் நேரத்தை மாற்றி கொள்கிறேன், ஒரே நாளில் இரண்டும் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும். என்று குறிப்பிட்டுள்ளார்.
#AK61FirstLook announcement time sollunga @BoneyKapoor sir.. Will change my #SivaSivayam first song release time accordingly.. Double damaka for me today..
— Mohan G Kshatriyan (@mohandreamer) September 21, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments