உயிருக்கே ஆபத்து.. தமிழக அரசு இதற்கு தடை விதிக்க வேண்டும்.. இயக்குனர் மோகன் ஜி வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ..!
- IndiaGlitz, [Sunday,April 21 2024]
இயக்குனர் மோகன் ஜி தனது சமூக வலைதளத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு தமிழக அரசு இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இதனால் குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து என்றும் பதிவு செய்துள்ளார்.
’பழைய வண்ணாரப்பேட்டை’ ’திரௌபதி’ ’ருத்ர தாண்டவம்’ ’பகாசூரன்’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இயக்குனர் மோகன் ஜி. இவர் தனது சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது பல்வேறு விஷயங்களை பதிவு செய்து வரும் நிலையில் தற்போது குழந்தைகள் மத்தியில் பிரபலமாகி வரும் ஸ்மோக் பிஸ்கட்டினால் ஏற்படும் ஆபத்தை உணர்த்தும் விதமாக ஒரு அதிர்ச்சி வீடியோ வெளியிட்டுள்ளார்
அந்த வீடியோவில் சிறுவன் ஒருவன் ஸ்மோக் பிஸ்கட்டை வாங்கி ஆர்வத்துடன் சாப்பிடும் நிலையில் சில நிமிடங்களில் வலியால் துடைக்கிறான். அதிர்ச்சி தரும் இந்த வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள மோகன் ஜி கூறி இருப்பதாவது:
இது போன்று விற்கும் ஸ்மோக் பிஸ்கட் என்ற திண்பண்டத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும்.. குழந்தைகள் புகையை பார்த்து ஆசையாக சாப்பிட அடம் பிடிப்பார்கள்.. அதில் ஊற்றப்படுவது லிக்யூட் நைட்ரஜன். ஒரு ஸ்பூன் உட்கொண்டால் கூட உயிருக்கு ஆபத்து.. தமிழக அரசு இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
இது போன்று விற்கும் #SmokeBiscuit என்ற திண்பண்டத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும்.. குழந்தைகள் புகையை பார்த்து ஆசையாக சாப்பிட அடம் பிடிப்பார்கள்.. அதில் ஊற்றப்படுவது #LiquidNitrogen.. ஒரு ஸ்பூன் உட்கொண்டால் கூட உயிருக்கு ஆபத்து.. தமிழக அரச இதற்கு தடை விதிக்க வேண்டும் @CMOTamilnadu pic.twitter.com/Nel8I57h5A
— Mohan G Kshatriyan (@mohandreamer) April 21, 2024