'ஆட்டம் ஆரம்பம்': 'ருத்ரதாண்டவம்' ரிலீஸ் தேதியை அறிவித்த மோகன் ஜி!
Send us your feedback to audioarticles@vaarta.com
இயக்குனர் மோகன்ஜி இயக்கத்தில் உருவான ’திரௌபதி’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் அவரது அடுத்த திரைப்படமான ’ருத்ரதாண்டவம்’ என்ற திரைப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தப்படம் மதமாற்றம் செய்பவர்கள் குறித்த கதையம்சம் கொண்டது என்பதால் இந்த படம் வெளிவந்தால் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தும் என்றும் நெட்டிசன்களால் கூறப்பட்டது. இருப்பினும் இந்த படத்திற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பும் இன்னொரு பக்கம் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ’ருத்ரதாண்டவம்’ படம் தற்போது ரிலீசுக்கு தயாராகி விட்டதாகவும் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் மோகன்ஜி தெரிவித்திருந்தார். இதனை அடுத்து சற்றுமுன் ’ருத்ரதாண்டவம்’ திரைப்படம் அக்டோபர் 1ஆம் தேதி வெளியாகும் என தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
’திரௌபதி’ தாய் மற்றும் ஈசன் துணையுடன் உலகம் முழுவதும் அக்டோபர் 1 முதல் திரையரங்குகளில் ஆட்டம் ஆரம்பம் என்று மோகன்ஜி தெரிவித்துள்ளதை அடுத்து இந்த படத்திற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
’திரௌபதி’ படத்தின் ஹீரோ ரிசார்ட்ஸ் நாயகனாக நடித்திருக்கும் இந்தப் படத்தில் தர்ஷா குபதா, ராதாரவி, கருணாஸ் உள்பட பலர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திரெளபதி தாய் மற்றும் ஈசன் துணையுடன் உலகம் முழுவதும் அக்டோபர் 01 முதல் திரையரங்குகளில்
— Mohan G Kshatriyan (@mohandreamer) September 16, 2021
ஆட்டம் ஆரம்பம்.. #ருத்ரதாண்டவம் #RudraThandavam#RudraThandavamTrailer ??????https://t.co/MqjPwFzNxj pic.twitter.com/KvKb4QOKv2
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com