அத்தனை பேர் இருந்தும் தோள் கொடுக்க ஆளில்லை… கிரிக்கெட் வீரர் சிராஜ்க்கு ஏற்பட்ட அவலம்!

இந்தியக் கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக வளர்ந்து வரும் இளம் கிரிக்கெட் வீரர் சிராஜ் பற்றிய உருக்கமான தகவல் ஒன்று சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கொரோனா காரணமாக கிரிக்கெட் வீரர் சிராஜின் தந்தை இறந்துவிட்டார். இந்த தருணத்தில் சிராஜ் ஆஸ்திரேலியா தொடருக்கான குவாரண்டைனில் ஆஸ்திரேலிய தலைநகர் மெல்பர்னில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்க வைக்கப்பட்டு இருந்தார்.

மேலும் கொரோனா குவாரண்டைன் விதிகள் கடுமையாக பின்பற்றப்பட்டதால் ஒவ்வொரு வீரர்களும் தனித்தனி அறைகளில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர். கூடவே கிரிக்கெட் வீரர்கள் வெளியே வரமுடியாதபடி ஒவ்வொரு அறைக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

இந்த நிலைமையில்தான் தன்னுடைய தந்தை இறந்துவிட்டார் என்ற தகவல் சிராஜுவுக்கு தெரியவந்தது. ஆனால் இந்த வருத்தத்தைப் பகிர்ந்து கொள்ளவோ அல்லது மற்றவர்கள் சிராஜுவுக்கு ஆறுதல் சொல்லவோ எந்த வாய்ப்பும் வழங்கப்படாமல் கிட்டத்தட்ட 14 நாட்கள் அவர் தனிமையில் வாடியுள்ளார்.

இந்நிலையில் கேப்டன் விராட் கோலி உட்பல பலரும் வீடியோ கால் வாயிலாக சிராஜுவுக்கு ஆறுதல் சொல்ல முயன்றாலும் அவர் அடைந்த மனவேதனைக்கு அளவே இல்லை என்றும் அந்த உருக்கமான நாட்களில் நடந்த சம்பவங்களைக் குறித்தும் Mission Domination: An unfinished Quest எனும் புத்தகம் விரிவாக குற்பிட்டு இருக்கிறது.

போரியா மஜும்தார் மற்றும் குஷன் சர்கார் ஆகிய இருவர் சேர்ந்து எழுதிய இந்தப் புத்தகத்தில் சிராஜ்க்கு ஏற்பட்டது போலவே இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு ஏற்பட்ட பலதரப்பட்ட அனுபவங்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டு இருக்கின்றன. இந்நிலையில் சிராஜ் தந்தையை இழந்து 14 நாட்கள் தனிமையில் வாடிய நிகழ்வுகள் தற்போது சோஷியல் மீடியாவில் கவனம் பெற்றிருக்கிறது.

மேலும் போட்டியில் இருந்து சிராஜ் விலகிவிடுவாரா என சந்தேகம் எழுப்பிய ரசிகர்களுக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் அபாரமான பந்து வீச்சை வெளிப்படுத்தி அந்தச் சுற்றுப்பயணத்தில் அதிக விக்கெட்டுகளை (13) வீழ்த்திய இளம் வீரர் என்ற அடையாளத்தைப் பெற்றது குறித்தும் அந்தப் புத்தகம் விளக்கி இருக்கிறது. இந்தத் தகவல் தற்போது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றிருக்கிறது.

More News

கிளாமர் உடையில் பாலிவுட் நடிகை… பல்ஸை எகிற வைப்பதாக ரசிகர்கள் கமெண்ட்!

பாலிவுட்டில் முன்னணி நடிகையாகவும் கவர்ச்சி புயலாகவும் வலம் வருபவர் நடிகை மல்லிகா ஷெராவத்.

இந்த கொடுஞ்செயலில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுங்கள்.....! சீமான் காட்டம்....!

சென்னை கேபி.பார்க் பகுதியில் உதிரும் அடுக்குமாடி குடியிருப்பை கட்டி, கொடுமையான செயல்களை செய்த அதிகாரிகள் மீதும்,

டி20 உலகக்கோப்பை ஃபைனலில் மோதவுள்ள அணிகள்? பரபரப்பை கிளப்பும் புது கணிப்பு!

இந்தியக் கிரிக்கெட் அணியில் விளையாடி வரும் தினேஷ் கார்த்திக் வர&

அழகில், இளம் நடிகைகளை பின்னுக்கு தள்ளிய மாமியார்....! அதுவும் பிரபல சீரியலில் நடித்தவர்....!

நடிகை பிரவீனா நாயரின் புகைப்படங்கள் தான் இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.

பேச்சாளர் பாரதி பாஸ்கர் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்....! மருத்துவர்கள் கூறியது....?

பாரதி பாஸ்கரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.