ஆட்டோ ஓட்டு… பலரும் திட்டியபோது என் வாழ்க்கையை மாற்றியவர் இவர்தான்… சிராஜ்ஜின் மறுபக்கம்!

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளராக இருந்துவரும் முகமது சிராஜ் தன்னுடைய வாழ்க்கையின் கடினமான தருணங்களைத் தற்போது பொதுவெளியில் பகிர்ந்து கொண்டுள்ளார். அந்தத் தருணங்களில் என்னை முழுமையாக நம்பி எனக்கு கைக்கொடுத்தவர் விராட் கோலி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின்போது பிரபலமானர்வர்தான் முகமது சிராஜ். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 4 ஆவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் வாய்ப்பு கிடைக்கப்பெற்ற சிராஜ் ஒரு விக்கெட்டை வீழ்த்தியிருந்தார். அதைத் தொடர்ந்து 2 ஆவது இன்னிங்ஸில் ஒட்டுமொத்தமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸ்திரேலியா வீரர்களை கலங்கடித்தார். இதனால் கப்பா மைதானத்தில் இந்திய அணி வெற்றிப்பெற்று சாதனை படைத்தது.

இதே ஆஸ்திரேலிய டெஸ்ட் போட்டியின்போது சிராஜின் தந்தை இறந்துபோனார். ஆனால் எனது தந்தையின் இறப்புக்கு வருவதைவிட அவருடைய ஆசையை நிறைவேற்றவே விரும்புகிறேன் என்று கூறி ஒட்டுமொத்த ரசிகர்களையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருந்தார் சிராஜ். ஹைத்ராபாத்தில் வறுமையான குடும்பத்தில் பிறந்தவர் சிராஜ். அவருடைய அப்பா ஆட்டோ ஓட்டும் தொழிலை செய்துவந்தவர். ஆனால் தனது மகனை ஒரு கிரிக்கெட் வீரராகப் பார்க்க வேண்டும் என்று அவருக்கு கொள்ளை பிரியம்.

கடந்த 2017 ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிரான போட்டிகளில் அறிமுகமான சிராஜ் தனக்கு கிடைத்த அனைத்து வாய்ப்புகளையும் நழுவவிட்டார். தொடர்ந்து 2018 வரை பல போட்டிகளில் அவர் தடுமாறினார். இதனால் எனது கிரிக்கெட் வாழ்க்கையே சூனியமாகிவிடும் என நினைத்திருந்தேன். ஆனால் என்மீது நம்பிக்கை வைத்திருந்த விராட் கோல ஐபிஎல் போட்டிக்காக பெங்களூரு அணியில் என்னை தக்க வைத்து எனக்கு உற்சாகம் கொடுத்தார்.

அப்போது கோலி எனக்கு கொடுத்த தைரியத்தால்தான் நான் இன்றைக்கு கிரிக்கெட் விளையாடி வருகிறேன். எனக்கு எப்போதுமே விராட் கோலிதான் கேப்டன் என்றும் சிராஜ் தனது மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டுள்ளார். கேப்டன்சி தொடர்பாக விராட் கோலி பல்வேறு சறுக்கல்களைச் சந்தித்துவரும் இந்த நேரத்தில் என்னைக் காப்பாற்றியவர் கோலிதான் என சிராஜ் தெரிவித்து இருப்பத ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

More News

மருமகனுக்கு 365 வகையான சாப்பாடு… அசத்தும் பெண் வீட்டாரின் உபசரிப்பு!

மருமகனுக்கு விருந்து வைத்து அசத்துவதில் எப்போதும் பெண் வீட்டார் கெட்டிக் காரர்கள்தான்.

'சண்டை போடலைன்னா நம்மளையும் கொன்னுருவாங்க': 'வீரமே வாகை சூடும்' டிரைலர்!

விஷால் நடித்த 'வீரமே வாகை சூடும்' திரைப்படம் விரைவில் ரிலீஸாக உள்ள நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது 

ரஜினியை சந்திக்க தனுஷ் மறுத்தாரா?

தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யாவை பிரிய போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கு முன்னர் ரஜினி அவரை தொடர்புகொண்டு சந்திக்க முயற்சி செய்ததாகவும்

நடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சி வழக்கு: அரசியல் பிரபலம் கைது!

விஜய் மற்றும் சூர்யா நடித்த 'பிரண்ட்ஸ்' உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்த நடிகை விஜயலட்சுமி தற்கொலை வழக்கில் பிரபல அரசியல்வாதி ஒருவர் கைது செய்யப்பட்டு இருப்பது

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இந்த நடிகரா? ஹாட்ஸ்டார் அறிவிப்பு!

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி சமீபத்தில் முடிவு பெற்றது என்பதும் இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ஆக ராஜு தேர்வு செய்யப்பட்டார் என்பதும் இரண்டாவது இடத்தை பிரியங்கா பெற்றார்  என்பதும் தெரிந்ததே