சச்சின், டிராவிடுக்கு சமமானவரா விராத்கோஹ்லி! முகமது யூசுப் கருத்து
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோஹ்லி, ஐசிசி ரேங்கிங் பட்டியலில் நம்பர் ஒன் இடத்தில் தற்போது உள்ளார். இருப்பினும் சச்சின், டிராவிட் ஆகியோர்களை ஒப்பிடும் அளவுக்கு விராத் கோஹ்லி இல்லை என்று முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர் முகமது யூசுப் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
விராத் கோஹ்லி நல்ல பேட்ஸ்மேன் என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை. நான் அவர் ஆடும் போட்டிகளை விரும்பி பார்ப்பேன். ஆனால் அதே நேரத்தில் சச்சின், டிராவிட், லட்சுமண் ஆகியோர்களை ஒப்பிடும் அளவுக்கு கோஹ்லியின் ஆட்டம் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.
வாசிம் அக்ரம், வக்கார் யூனூஸ், சோயப் அக்தர், சாக்லைன் முஷ்டாக் போன்றவர்களின் பந்துவீச்சில் ரன்கள் எடுப்பது சாதாரணம் அல்ல. ஆனால் சச்சின், டிராவிட் மிக நேர்த்தியாக இவர்களுடைய பந்துகளை சந்தித்து ரன்களை குவிப்பார்கள். தற்போதைய பேட்ஸ்மேன்களில் பலர் வலிமை குறைந்த அணிக்கு எதிராக விளையாடும்போது மட்டுமே ரன்களை குவிக்கின்றனர் என்று குற்றம் சாட்டியுள்ளார்.
அதேபோல் ஆஸ்திரேலியா அணியின் பந்துவீச்சாளர்களான மெக்ரத், ஷார்ன் வார்னே, இந்திய பந்துவீச்சாளர்களான கும்ப்ளே, ஸ்ரீநாத், இலங்கையின் முத்தையா போன்ற பந்துவீச்சாளர்களுக்கு நிகராக தற்போது யாரும் இல்லை என்றும் யூசுப் தனது பேட்டியில் மேலும் கூறியுள்ளார்.
42 வயதான முகமது யூசுப் 90 டெஸ்ட் போட்டிகளிலும், 288 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். 39 சதங்களுடன் இவர் மொத்தம் 17,250 ரன்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments