சென்னை சிஎஸ்கே மீது கடும் கோபத்தில் இருக்கும் இங்கிலாந்து கேப்டன்! என்ன காரணம்?

அகமதாபாத் மோதேரா மைதானத்தில் கடந்த 24 ஆம் தேதி துவங்கிய 3 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அதிரடி வெற்றிப் பெற்றுள்ளது. பகல் – இரவு ஆட்டமாக நடத்தப்பட்ட இந்தப் போட்டியில் மோதேரா மைதானம் முழுவதும் களிமண்ணால் நிரப்பட்டு இருந்தது. இதனால் பந்து வீசும் போது ஸ்விங் ஆகும் நிலைமை அதிகமாக இருந்தது எனக் கூறப்பட்டது. மேலும் இந்த மைதானம் ஸ்பின் பந்துக்கு மட்டுமே எடுபட்டதால் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு இங்கு வேலையே இல்லாமல் போனது.

இந்நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் இருந்து லீச் மட்டுமே ஸ்பின் பந்து வீசக்கூடியவராக இருந்தார். பகுதிநேர ஸ்பின் பந்து வீச்சாளரான ஜோ ரூட் முதல் இன்னிங்ஸில் வெறும் 8 ரன்களைக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவர்களைத் தவிர மற்ற அனைத்து வீரர்களும் வேகப்பந்து வீச்சாரளர்களாகவே இருந்தனர். இதுவே இங்கிலாந்து அணியின் வீழ்ச்சிக்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது.

மேலும் இந்த விஷயத்தில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் சென்னை சிஎஸ்கே மீது கடும் கோபத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. காரணம் இங்கிலாந்து அணியில் முழுநேர ஸ்பின் பந்து வீச்சாளராக இருந்த மொயின் அலி இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொள்ளவில்லை. ஐபிஎல் போட்டிகளில் சிஎஸ்கேவிற்காக விளையாடி வரும் இவர் தற்போது பயோ பபுள் முறையில் ஓய்வில் இருக்கிறார்.

ஒருவேளை தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்து-இந்தியா டெஸ்ட் போட்டிகளில் மொயின் அலி கலந்து கொண்டால் நேரடியாக மீண்டும் பயோ பபுள் விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். இதைத் தவிர்ப்பதற்காகத்தான் தற்போது மொயின் அலி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இடம் பெறவில்லை.

மேலும் நேற்றைய போட்டியில் ஆலிப் போப்க்கிற்காக களம் இறங்க வேண்டிய சாம் கரனும் டெஸ்ட் போட்டியில் இருந்து விலகினார். காரணம் இவரும் சென்னை சிஎஸ்கே அணிக்காக ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருகிறார். இந்நிலையில் மொயின் அலி, சாம் கரன் என இரண்டு பெரிய முன்னணி வீரர்களும் இங்கிலாந்து அணியில் இடம்பெறாதது பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. ஒருவேளை மொயின் அலி மட்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடி இருந்தால் இந்திய அணியின் விக்கெட்டுகளை வீழ்த்துவதற்கு வசதியாக இருந்து இருக்கும் என்று நினைத்த கேப்டன் ஜோ ரூட் தன்னுடைய ஒட்டுமொத்த கோபத்தை சென்னை சிஎஸ்கே பக்கம் திருப்பி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் செய்த புது சாதனை… குவியும் பாராட்டு!

இங்கிலாந்து மற்றும் இந்தியாவிற்கு இடையிலான 3 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அகமதாபாத்தில் கடந்த 24 ஆம் தேதி தொடங்கி தற்போது முடிவை எட்டி இருக்கிறது.

பயிர்க்கடனைத் தொடர்ந்து நகைக்கடனும் தள்ளுபடி… தமிழக முதல்வர் அறிவிப்பு!

தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் வாங்கிய நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும்

அந்தரங்க விஷயங்களை பேசுவதற்காக யூடியூப் சேனல் ஆரம்பித்த 'பிக்பாஸ் தமிழ்' நடிகை!

பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் அந்தரங்க விஷயங்களை பேசுவதற்காகவே யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கோவையில் பிரதமர் மோடி கலந்து கொண்ட விழாவில் முலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரை!

கோவை கொடிசியா வளாகத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று விழா நடைபெற்றது.

பாவாடை சட்டையில் பட்டையை கிளப்பும் நடிகை அஞ்சலி!

தமிழ் திரையுலகில் சிறப்பாக நடிக்க தெரிந்த மிகச் சில நடிகைகளில் ஒருவர் அஞ்சலி என்பது தெரிந்ததே. 'கற்றது தமிழ்' என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன்பின் 'அங்காடித்தெரு' 'தூங்காநகரம்'