கொரோனோ வைரஸிலிருந்து சீனாவை காக்க இந்தியா தயாராக இருக்கிறது..! பிரதமர் மோடி.

கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க இந்தியா உதவத் தயார் என, சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு பிரதமர் மோடி கடிதம் எழுதி உள்ளார்.

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. சுமார் 2 ஆயிரத்து 656 பேருக்கு புதிதாக இந்த வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. வைரசால் இறந்தவர்கள் எண்ணிக்கை 900 வரை இருக்கிறது.

மேலும், 37 ஆயிரத்து 198 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக, சீனாவின் சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. சீனாவில் ஏற்கனவே அமெரிக்க நாட்டை சேர்ந்தவர் வைரஸ் பாதிப்பால் உயிரிழந்த நிலையில், ஜப்பானை சேர்ந்த ஒருவரும் உயிரிழந்துள்ளார்.

சீனாவை தவிர்த்து பிலிப்பைன்ஸ் மற்றும் ஹாங்காங்கிலும் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க இந்தியா உதவத் தயார் என, சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு பிரதமர் மோடி கடிதம் எழுதி உள்ளார்.

மேலும் சீனாவின் ஹுபெய் நகரில் தவித்த இந்தியர்களை மீட்க உதவியதற்காக, சீன அதிபருக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.