ஸ்வைப்பிங் மிஷின்களுக்கு வரிவிலக்கு. நனவாகிறது மோடியின் கனவு
Monday, November 28, 2016 தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
Send us your feedback to audioarticles@vaarta.com
ரூ.500, ரூ.1000 செல்லாது என்று அறிவிக்கப்பட்டு இரண்டு வாரங்களுக்கு மேல் ஆகியும் நாடு முழுவதிலும் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. ரூ.2000 நோட்டு தாராளமாக கிடைத்தாலும் சில்லரை பிரச்சனை பெரும் பிரச்சனையாக உள்ளது. இதனால் சின்ன சின்ன கடைகளில் கூட ஸ்வைப்பிங் மிஷின் வைக்க ஆலோசனை நடைபெற்று வருகிறது.
பெரிய ஓட்டல்களில் ரூ.100க்கு குறைவான பில் இருந்தால் ஸ்வைப்பிங் மிஷினில் ஸ்வைப் செய்ய மறுத்தவர்கள் கூட, தற்போது ஒரே ஒரு காபி சாப்பிட்டு கார்டை நீட்டினால் கூட மறுப்பேதும் சொல்லாமல் ஸ்வைப் செய்கின்றனர்.
இதனால் ஸ்வைப்பிங் மிஷினின் உபயோகம் பலமடங்கு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் ஒரு திருமணத்தில் மொய்ப்பணம் வாங்க ஸ்வைப் மிஷினுடன் உட்கார்ந்திருந்த மணமக்கள் குறித்த செய்தியை பார்த்தோம்.
இதைத்தான் மோடி அரசும் எதிர்பார்த்தது. எனவே அனைவரும் ரொக்கம் உபயோகிப்பதை குறைக்கும் வகையில் தற்போது ஸ்வைப்பிங் இயந்திரத்தை தயாரிப்பதற்கான கலால் வரியை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை இந்த வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளதால் ஸ்வைப்பிங் மிஷின் விலை குறையும் என்றும் இதனால் பெட்டிக்கடை முதல் மளிகைக்கடை வரை இனிமேல் ஸ்வைப் மிஷினை பயன்படுத்தும் காலம் வெகுதூரத்தில் இல்லை என்றும் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments