ஸ்வைப்பிங் மிஷின்களுக்கு வரிவிலக்கு. நனவாகிறது மோடியின் கனவு

  • IndiaGlitz, [Monday,November 28 2016]

ரூ.500, ரூ.1000 செல்லாது என்று அறிவிக்கப்பட்டு இரண்டு வாரங்களுக்கு மேல் ஆகியும் நாடு முழுவதிலும் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. ரூ.2000 நோட்டு தாராளமாக கிடைத்தாலும் சில்லரை பிரச்சனை பெரும் பிரச்சனையாக உள்ளது. இதனால் சின்ன சின்ன கடைகளில் கூட ஸ்வைப்பிங் மிஷின் வைக்க ஆலோசனை நடைபெற்று வருகிறது.
பெரிய ஓட்டல்களில் ரூ.100க்கு குறைவான பில் இருந்தால் ஸ்வைப்பிங் மிஷினில் ஸ்வைப் செய்ய மறுத்தவர்கள் கூட, தற்போது ஒரே ஒரு காபி சாப்பிட்டு கார்டை நீட்டினால் கூட மறுப்பேதும் சொல்லாமல் ஸ்வைப் செய்கின்றனர்.
இதனால் ஸ்வைப்பிங் மிஷினின் உபயோகம் பலமடங்கு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் ஒரு திருமணத்தில் மொய்ப்பணம் வாங்க ஸ்வைப் மிஷினுடன் உட்கார்ந்திருந்த மணமக்கள் குறித்த செய்தியை பார்த்தோம்.
இதைத்தான் மோடி அரசும் எதிர்பார்த்தது. எனவே அனைவரும் ரொக்கம் உபயோகிப்பதை குறைக்கும் வகையில் தற்போது ஸ்வைப்பிங் இயந்திரத்தை தயாரிப்பதற்கான கலால் வரியை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை இந்த வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளதால் ஸ்வைப்பிங் மிஷின் விலை குறையும் என்றும் இதனால் பெட்டிக்கடை முதல் மளிகைக்கடை வரை இனிமேல் ஸ்வைப் மிஷினை பயன்படுத்தும் காலம் வெகுதூரத்தில் இல்லை என்றும் கூறப்படுகிறது.

More News

ரூபாய் நோட்டு தட்டுப்பாடு எதிரொலி. ரூ.2000க்காக கருத்தடை செய்த கூலித்தொழிலாளி

மத்திய அரசு கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்தது. கருப்புப்பணத்தையும், கள்ள நோட்டையும் ஒழிக்க வேண்டும்...

நடிகைகளுக்கு இந்த வேலை தேவையா? ஆதங்கத்துடன் ஸ்ரீப்ரியா

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் குடும்பத்தில் நடக்கும் சண்டை சச்சரவுகளை தீர்த்து வைக்கும் நிகழ்ச்சிகள் நாளுக்கு நாள் பெருகி வருகிறது...

ரஜினிக்காக உக்ரைன் நாட்டை உருவாக்கிய ஷங்கர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த்வரும் '2.0' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பை...

சரத்குமார் சஸ்பெண்ட் வழக்கில் நீதிமன்றம் அதிரடி முடிவு

முன்னாள் நடிகர் சங்க தலைவர் சரத்குமார், முன்னாள் பொதுச்செயலாளர் ராதாரவி ஆகியோர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடிகர்...

நடிகர் சங்கத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள். முழுவிபரம்

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 63வது பொதுக்குழு கூட்டம் ஒருசில சிறு சலசலப்புடன் நேற்று முடிவடைந்தது. கருணாஸ் கார் உடைப்பு, விஷால்...