முதல்முறையாக அரசும் மக்களும் ஒரே திசையில் பயணம். பிரதமர் நரேந்திர மோடி உரை

  • IndiaGlitz, [Sunday,January 01 2017]

பாரத பிரதமர் நரேந்திர மோடி கடந்த 8ஆம் தேதி உயர்மதிப்பு கொண்ட ரூபாய்நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்த பின்னர் மீண்டும் இன்று தொலைக்காட்சியில் உரையாற்றினார். இந்த உரையில் பிரதமர் கூறிய முக்கிய அம்சங்களை தற்போது பார்ப்போம்

ஆங்கிலப் புத்தாண்டை புதிய உத்வேகத்துடன் தொடங்குவோம் - பிரதமர் மோடி

இறைவன் படைப்பில் மனிதன் நல்லவன் என்றாலும் தீமையின் பிடியில் சிக்குகிறான்:

ஊழலும், கறுப்புப்பணமும் நல்லவர்களையும் வீழ்த்திவிடுகிறது

ஊழலை ஒழிக்க வேண்டும் என்ற துடிப்பு நாட்டு மக்களிடம் உள்ளது

ஊழல் ஒழிப்பு நடவடிக்கைக்காக நாட்டு மக்கள் காத்துக்கொண்டிருந்தார்கள்

பணமதிப்பிழப்பு விவகாரத்தால் ஏற்பட்ட கஷ்டங்களை நாட்டு மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்


பண மதிப்பு நீக்க நடவடிக்கை நீண்ட கால நன்மை கருதி எடுக்கப்பட்டது

புதுவருடத்தில் வங்கிகள் இயல்பு நிலைக்கு திரும்ப நடவடிக்கைகள் எடுக்கப்படும்

தேசப்பற்றில் தங்களுக்கு நிகர் யாருமில்லை என்பதை மக்கள் மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார்கள்

ரூபாய் நோட்டு விவகாரத்தில் இந்திய அரசின் நடவடிக்கையை உலகின் வேறு எந்த செயல்பாட்டுடனும் ஒப்பிட முடியாது

வழக்கமாக நல்ல விஷயங்களில் அரசும் மக்களும் எதிரெதிர் துருவங்களாக இருப்பார்கள். ஆனால் கருப்பு பண ஒழிப்பில் அரசும், மக்களும் முதன் முறையாக ஒரே திசையில் பயணிக்கிறார்கள்

நவ.8-க்கு பிறகு மக்கள் பட்ட துன்பங்கள் அவர்களின் தியாகங்களாக பதிவாகும்

ஒழிப்பு, கள்ளச்சந்தை, கள்ளநோட்டு ஒழிப்பில் ஒரு அடி கூட பின்வாங்கியதில்லை என்பதை மக்கள் நிரூபித்துள்ளார்கள்

கருப்பு பண ஒழிப்பில் மக்கள் தங்களை தாங்களே சுயபரிசோதனை செய்து கொண்டது வியப்பு

24 லட்சம் மக்கள் மட்டுமே தங்கள் ஆண்டு வருமானம் ரூ.10 லட்சம் என கூறியிருப்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதா?

கருப்புப் பண ஒழிப்பில் கடுமையான நடவடிக்கைகள் தொடரும்

அரசின் நடவடிக்கையால் பெரிய மனிதர்கள் மற்றும் அதிகாரிகளின் உண்மை முகம் தெரிய வந்தது

அரசின் நடவடிக்கையால் பயங்கரவாத நடவடிக்கைகள் முடங்கியுள்ளன

நகர்ப்புறங்களில் ஏழைகளுக்கு வீட்டு வசதி செய்து தரப்படும்

நகர்ப்புறங்களில் வீடு கட்ட ரூ.9 லட்சம் கடனுக்கு 4% தள்ளுபடி

கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு அளிக்கப்படும் கடன் அதிகரிக்கப்படும்

நபார்டு வங்கி மூலம் கடந்த மாதம் ரூ.21,000 கோடி வழங்கப்பட்டது. நபார்டு வங்கி மூலம் இந்த மாதம் அளிக்கப்படும் கடன் ரூ.41 ஆயிரம் கோடியாக அதிகரிக்கப்படும்

குறிப்பிட்ட விவசாய கடன்களின் 60 நாட்களுக்கான வட்டியை அரசே செலுத்தும்

சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாத தொகை ரூ.1 கோடியிலிருந்து ரூ.2 கோடியாக உயர்த்தப்படும்

கர்ப்பிணிப் பெண்களுக்கு ரூ.6000 உதவித்தொகை மத்திய அரசு வழங்கும்

சிறு, குறு தொழில்களுக்கான ரொக்க கடன் வரம்பு 20%லிருந்து 25%ஆக உயர்த்தப்படுகிறது

மூத்த குடிமக்களின் முதலீட்டிற்கு ரூ.10 லட்சம் வரை 8% வட்டி வழங்கப்படும்

காந்தியின் நேர்மையான கொள்கை இந்த காலக்கட்டத்திலும் தேவை

நாடு முழுவதும் நாடாளுமன்றத்திற்கும், சட்டமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து ஆராய்வோம்

மின்னணு பரிவர்த்தனையை எளிதாக்க பீம் செயலியை அதிகம் பயன்படுத்துங்கள்.

More News

'கபாலி' இயக்குனரின் புதிய அவதாரம்

'அட்டக்கத்தி', மெட்ராஸ் ஆகிய இரண்டு வெற்றி படங்களை இயக்கி கோலிவுட்டின் கவனிக்கத்தக்க இயக்குனராக மாறிய பா.ரஞ்சித்...

இளையதளபதி விஜய்யின் 'பைரவா' டிரைலர் விமர்சனம்

2017ஆம் ஆண்டு புத்தாண்டு பிறப்பதற்கு ஒருசில மணி நேரங்களுக்கு முன்பு புத்தாண்டு விருந்தாக வெளிவந்துள்ளது இளளயதளபதி விஜய்யின் 'பைரவா' டிரைலர்

அனிருத்தின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

அனிருத் இசையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான 'ரெமோ' கடந்த அக்டோபர் மாதம் வெளிவந்து உலகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றி...

கவர்னருக்கு ஆபாச வீடியோ அனுப்பிய அரசு உயரதிகாரி கைது

புதுச்சேரி கவர்னராக சமீபத்தில் பொறுப்பேற்ற இந்தியாவின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி கிரண்பேடி

சசிகலாவின் அரசியல் வாழ்க்கை ஜனவரியில் முடிந்துவிடும். சுப்பிரமணியன் சுவாமி

அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் இன்று சசிகலா நடராஜன் அதிமுகவின் பொதுச்ச்செயலாளராக பதவி...