அனைத்து மாநிலங்களுக்கும் இனி இலவச தடுப்பூசி: பிரதமர் மோடியின் உரையின் முக்கிய அம்சங்கள்!

பிரதமர் மோடி இன்று மாலை 5 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார் என்ற செய்தி வெளியான நிலையில் அவரது உரையின் முக்கிய தொகுப்புகள் இதோ:

• கொரோனா தடுப்பு ஊசி இயக்கம் தொடர்பாக சில அரசியல் செய்கிறார்கள். அது கண்டனத்திற்குரியது

• மாநிலங்கள் ஊரடங்கு அமல்படுத்துவது தொடர்பாக மத்தியரசு வழிகாட்டி வருகிறது

• மாநிலங்களின்‌ தடுப்பூசி தேவையை அறிந்திருக்கிறோம். அதை பூர்த்தி செய்வோம்

• முன்கள பணியாளர்களுக்கு நாம் தடுப்பூசி போட்டதால் தான் பல லட்சம் மக்களை காப்பாற்ற முடிந்தது

• கோவேக்சின் ஒரு உயிர் காக்கும் மருந்தாக அமைந்துள்ளது

• உள்நாட்டில் தடுப்பூசி தயாரிக்காவிட்டால் நாம் என்ன செய்திருக்க முடியும்?

• கொரோனாவை தொடர்ந்து புதிய சுகாதார கட்டமைப்பை இந்தியா உருவாக்கியுள்ளது

• கொரோனா சிகிச்சைக்கான மருந்து உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது

• மாநிலங்களுக்கு தேவையான கொரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு கொள்முதல் செய்து இலவசமாக வழங்கும்

•இந்தியாவில் மேலும் 3 தடுப்பூசிகள் விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை

• தீபாவளி வரை உணவு தானியங்களை இலவசமாக வழங்க மத்திய அரசு முடிவு

• கொரோனா தடுப்பூசி முகாம்களை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

• 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வரும் 21-ம் தேதி முதல் இலவச கொரோனா தடுப்பூசி

• கொரோனாவிடமிருந்து நம்மை தற்காத்து கொள்ள உதவும் ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே

• குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது பாதுகாப்பானதா என்பதை அறிவதற்கான சோதனைகளை நாம் தொடங்கி இருக்கிறோம். வைரசுக்கு எதிரான நாட்டின் போரில் இது பெருமளவு உதவும்

• நமது விஞ்ஞானிகளின் கடின உழைப்பு காரணமாக, ஓராண்டுக்குள், இந்தியா ஒன்றல்ல, இரண்டு கொவிட் தடுப்பூசிகளை உருவாக்கியுள்ளது

• தடுப்பூசியை உருவாக்கும் பணியில் இன்று 7 நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. மூன்று சோதனைகள் நடைபெற்று வருகின்றன. நாசி வழியாக செலுத்தும் தடுப்பூசிகள் குறித்தும் நாம் ஆராய்ச்சி செய்து வருகிறோம்

More News

கிளாமரில் கெத்து காட்டிய குடும்ப குத்து விளக்கு சீரியல் நடிகை!

தொலைக்காட்சி சீரியலில் குடும்ப விளக்காக, குடும்ப பாங்கான வேடங்களில் நடிக்கும் பல நடிகைகள் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கவர்ச்சியின் உச்சத்திற்கே சென்று கிளாமர் புகைப்படங்களை

லோகேஷ் கனகராஜ் படத்தின் இந்தி ரீமேக்கில் காஜல் அகர்வால்?

லோகேஷ் கனகராஜ் இயக்கிய வெற்றி படங்களில் ஒன்று 'கைதி' என்பது தெரிந்ததே. கார்த்தி நடித்த இந்த திரைப்படத்தில் இரண்டு சிறப்பு அம்சங்கள் இருந்தது. ஒன்று இந்த படத்தில் பாடல்கள் இல்லை,

கருவாடு மீனாகாது… சசிகலா குறித்து முன்னாள் அமைச்சர் கடும் விமர்சனம்!

கடந்த சில தினங்களுக்கு முன்பு திருமதி சசிகலா “அதிமுகவை சரிசெய்து விடலாம்” என்பது போன்ற வார்த்தைகளை தனது தொண்டர் ஒருவரிடம் தொலைபேசி வாயிலாக தெரிவித்து இருந்தார்.

மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் நடக்கும் தேதி… வெளியான பரபரப்பு தகவல்!

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வரும் செப்டம்பர் 19 தொடங்கி அக்டோபர் 15 ஆம் தேதிக்குள் மீதமுள்ள 31 ஐபிஎல் போட்டிகளையும் நடத்த பிசிசிஐ திட்டமிட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

'தளபதி 65' படத்தில் நடிப்பதை உறுதி செய்த பிரபல நடிகர்!

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கிவரும் 'தளபதி 65' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியா நாட்டில் முடிவடைந்தது என்பது தெரிந்ததே.