ரஜினி முதல் ராகுல் காந்தி வரை.. 'ஆர்.ஆர்.ஆர்' படக்குழுவினர்களுக்கு குவியும் வாழ்த்துக்கள்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தில இடம்பெற்ற ’நாட்டு நாட்டு’ என்ற பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளதை அடுத்து படக்குழுவினர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. திரையுலக மற்றும் அரசியல் பிரபலங்களின் வாழ்த்துக்களை தற்போது பார்ப்போம்
பிரதமர் மோடி: நாட்டு நாட்டு பாடல் உலக அளவில் புகழ்பெற்றது என்றும் இன்னும் பல ஆண்டுகளுக்கு நினைவு கூறப்படும் ஒரு பாடல். இந்த மதிப்பு மிக்க அங்கீகாரத்திற்கு இசையமைப்பாளர் கீரவாணி பாடல் ஆசிரியர் சந்திரபோஸ் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்
முதல்வர் முக ஸ்டாலின்: ’ஆஸ்கர் விருது வென்ற முதல் இந்திய மற்றும் ஆசிய பாடல் என்ற பெருமையை பெற்று வரலாறு படைத்துள்ளது. நாட்டு நாட்டு பாடல் மகத்தான சாதனை செய்த ஆர்ஆர்ஆர் குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள்
ராகுல் காந்தி: இந்தியா முழுவதும் நடனமாடிய பாடல் உண்மையிலேயே உலகளவில் சென்றதற்கு வாழ்த்துக்கள். ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்திற்காக ஆஸ்கார் விருதுகளில் சிறந்த ஒரிஜினல் பாடலை வென்றதற்காக ஒட்டுமொத்த படக்குழுவினர்களுக்கு வாழ்த்துக்கள் .
ரஜினிகாந்த்: ஸ்ரீ கீரவானி அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். கீரவாணி, திரு. ராஜமௌலி பெருமைக்குரிய ஆஸ்கார் விருதைப் பெற்றதற்காக வாழ்த்துக்கள். பெருமை மிக்க இந்தியர்களுக்கு தலை வணங்குகிறேன்.
கார்த்திக் சுப்புராஜ்: ‘ஆர்.ஆர்.ஆர்’ படக்குழுவினர் அனைத்து இந்தியர்களையும் பெருமைப்படுத்தியுள்ளீர்கள்! எம்.எம்.கீரவானி, எஸ்.எஸ்.ராஜமெளலில் உங்கள் மேதைமை ஒப்பற்றது. வாழ்த்துகள்
யுவன்ஷங்கர் ராஜா: வாழ்த்துகள் எம்.எம்.கீரவானி ஐயா & பாடலாசிரியர் சந்திரபோஸ். சிறந்த அசல் பாடலுக்கான ஆஸ்கார் விருதுக்கு வாழ்த்துக்கள்
நடிகர் பிரகாஷ்ராஜ்: என்ன ஒரு பெருமையான தருணம்.. நன்றி எம்.எம்.கீரவானி & பாடலாசிரியர் சந்திரபோஸ். RRR குழுவிற்கு வாழ்த்துக்கள்> நீங்கள் நம் அனைவரையும் பெருமைப்படுத்தியுள்ளீர்கள்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments