"என்னால் சூரிய கிரகணத்தை சரியாக பார்க்க முடியவில்லை"..! பிரதமர் மோடி வருத்தம்.

  • IndiaGlitz, [Thursday,December 26 2019]

மேக மூட்டம் காரணமாக தன்னால் முழு வளைய சூரிய கிரகணத்தை காணமுடியவில்லை என்று பிரதமர் மோடி வருத்ததுடன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், மற்ற இந்தியர்களை போலவே முழு வளைய சூரிய கிரகணத்தை காண தான் ஆர்வமாக இருந்ததாகவும் துரதிர்ஷ்டவசமாக காண முடியாமல் போனதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் கேரள மாநிலம் கோழிக்கோடு மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளில் தெரிந்த முழு வளைய சூரிய கிரகணத்தை நேரடி ஒளிப்பரப்பின் மூலம் கண்டு ரசித்ததாக தெரிவித்துள்ளார். மேலும் நிபுணர்களுடன் கலந்துரையாடி இது குறித்த தனது அறிவை வளப்படுத்திக்கொண்டதாகவும் பிரதமர் மோடி ட்விட் செய்துள்ளார்.