'தேர்தல்' படத்தில் நாயகன், வில்லன், காமெடியன்கள் இவர்கள்தான்: உதயநிதி
- IndiaGlitz, [Friday,March 22 2019]
திமுக தலைவரின் மகனாக இருந்தாலும் உதயநிதி ஸ்டாலின் தற்போது ஒரு நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இருப்பதால் சினிமா பாணியில் நேற்று வேலூரில் நடந்த தேர்தல் பிரச்சாரம் ஒன்றில் பேசினார்.
அதாவது தேர்தல் என்ற திரைப்படத்தில் தி.மு.க-வின் தேர்தல் அறிக்கைதான் கதாநாயகன் என்றும், இந்த படத்தின் வில்லன் மோடி என்றும் கூறிய உதயநிதி, வில்லனின் அடியாட்களாக எடப்பாடி, ஓ.பி.எஸ் உள்ளதாகவும், ராமதாஸ், அன்புமணி ஆகியோர் இந்த படத்தின் காமெடியன்கள் என்றும் கூறியுள்ளார்.
மேலும் மோடி, இந்தியாவின் பிரதமரே இல்லை என்றும், அவர் ஒரு என்.ஆர்.ஐ பிரதமர் என்றும், ஆண்டுக்கு 10 நாள்கள் மட்டும் இந்தியாவில் இருந்துவிட்டு, வெளிநாடு சென்றுவிடுவதாகவும், கடந்த நான்கரை ஆண்டுகளில் 55 நாடுகளுக்கு 48 முறை சென்ற பிரதமர், தமிழகத்துக்கு 4 ஆண்டுகளில் ஒருமுறைகூட வரவில்லை என்றும் உதயநிதி குற்றஞ்சாட்டியுள்ளார்.
கடந்த ஒரு வாரமாக ‘சௌகிதார்’ என்று தன்னை தானே அழைத்து கொள்ளும் மோடி. காவலாளி கிடையாது என்றும் அவர் ஒரு கோமாளி சர்வாதிகாரி என்றும் உதயநிதி கடுமையாக விமர்சித்துள்ளார்.