ஜன் தன் வங்கிக்கணக்கில் உள்ள பணத்தை கொடுக்க வேண்டாம். பிரதமர் மோடி அதிரடி
Sunday, December 4, 2016 தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
Send us your feedback to audioarticles@vaarta.com
அரசு கொடுக்கும் மானியங்கள் ஏழைகளுக்கு நேரடியாக சென்று சேர வேண்டும் என்ற நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்டதுதான் ஜன தன் வங்கி கணக்கு. ஆனால் இந்த வங்கி கணக்கில் இதுவரை மினிமம் பேலன்ஸ் என்று எதுவுமே இல்லாமல் அல்லது மிகக்குறைந்த தொகை இருந்த நிலையில் தற்போது பெரும்பாலான கணக்குகளில் திடீரென ஆயிரங்களும், லட்சங்களும் உள்ளன
இதுகுறித்து கருத்து கூறிய பிரதமர் மோடி, 'இன்று கருப்புப்பணம் வைத்திருப்பவர்கள் ஜன் தன் வங்கி கணக்கு வைத்திருப்பவர்களை தேடி ஓடுகின்றனர். அவர்களது கணக்கில் ரூ. 2 லட்சம் வரை டெபாசிட் செய்து வருகின்றனர். உங்களது வங்கிக் கணக்கில் போடப்பட்ட பணத்தை நீங்கள் திருப்பிக் கொடுக்காதீர்கள். உங்கள் கணக்கிலேயே இருக்கட்டும். பணத்தை கொடுக்குமாறு உங்களை மிரட்டினால், உடனே எனக்கு கடிதம் எழுதுங்கள் என்று கூறியுள்ளார்.
பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பால் அடுத்தவர்களின் ஜன் தன் வங்கிக்கணக்கில் பணம் போட்ட கருப்பு பண முதலைகள் அதிர்ச்சி அடைந்திருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments