ரூபாய் நோட்டு தடைக்கு பின் சக்திகாந்த் தாஸின் முக்கிய அறிவிப்புகள்

  • IndiaGlitz, [Wednesday,November 23 2016]

கடந்த 8ஆம் தேதி பாரத பிரதமர் நரேந்திரமோடி ரூ.500, ரூ.1000 செல்லாது என்ற அறிவிப்புக்கு பின்னர் ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் இன்று பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் ஒருசில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்புகள் குறித்து தற்போது பார்ப்போம்
*ரூபாய் நோட்டு செல்லாது அறிவிப்பால் கூட்டுறவு வங்கிகள் முடங்கியுள்ள நிலையில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கு ரூ.21,000 கோடி வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
*விவசாயிகளை பதிக்காத வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி நபார்டு மற்றும் ஆர்பிஐ வங்கி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
*. இதுவரை 82,000 ஏ.டி.எம். மையங்கள் புதிய ரூபாய் நோட்டுகளுக்கு ஏற்ப மறுவடிவமைப்பு செய்யப்பட்டுவிட்டுள்ளதாகவும் மற்ற ஏ.டி.எம் மையங்களிலும் இன்னும் ஒரு சில தினங்களில் மறுவடிவமைப்பு பணி முடிந்துவிடும்
*. நாட்டில் உள்ள 1.55 லட்சம் தபால் அலுவலகங்களில் 500, 2000 ரூபாய் நோட்டுக்கள் கிடைக்கும். டெபிட் கார்டு பயன்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை, சேவைக் கட்டணம் முன்பு அறிவித்தது போல் வரும் டிசம்பர் வரை இல்லை.
*. மத்திய அரசு ஊழியர்களுக்கு வருகிற டிசம்பர் 1ஆம் தேதி ரொக்கமாக ஊதியம் வழங்கப்படாது.
*. தற்போது, ஆன்லைன் நிதி பரிமாற்றம் அதிகரித்து இருப்பதா பொதுத்துறை வங்கிகள் தெரிவித்துள்ளன.
*. சுங்கச் சாவடிகளில் மின்னனு முறையில் கட்டணம் செலுத்தத் ஏற்பாடு செய்யப்படும். ஏடிஎம் கார்டு மீதும் எந்தவிதக் கட்டணமும் இல்லை.
*. ஈ-வாலட் (E-wallet) மூலம் செய்யப்படும் பண பரிவர்த்தனைகளுக்கான வரம்பு ஒரு நபருக்கு ரூ.10,000லிருந்து ரூ.20,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
*. சில தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் டெபிட் கார்ட் பண பரிவர்த்தனைக்கான சேவைக் கட்டணத்தை டிசம்பர் 31ஆம் தேதி வரை ரத்து செய்துள்ளன.