தினத்தந்தி பவளவிழாவில் ரஜினி! பிரதமர் மோடியுடன் சந்திப்பா?
Send us your feedback to audioarticles@vaarta.com
பாரத பிரதமர் நரேந்திரமோடி இன்று சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்தில் நடைபெறும் தினந்தந்தி பவளவிழாவில் கலந்து கொள்கிறார். இன்னும் சற்று நேரத்தில் இந்த விழா தொடங்கவுள்ளது.
இந்த நிலையில் இதே நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொள்ளவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஒரே நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மற்றும் ரஜினிகாந்த் ஆகிய இருவரும் கலந்து கொள்வதால் இருவரும் சந்தித்து பேச வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ரஜினிகாந்த் விரைவில் அரசியல் கட்சி தொடங்கவிருப்பதாக கூறப்படும் நிலையில் இன்று மோடி-ரஜினி சந்திப்பு நடந்தால் அந்த சந்திப்பு முக்கியத்துவம் பெரும் என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் இன்றைய தினந்தந்தி பவளவிழாவில் தமிழக ஆளுனர் பன்வாாிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நடிகர் பிரபு, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், நல்லக்கண்ணு, வாசன், சரத்குமார் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com