தினத்தந்தி பவளவிழாவில் ரஜினி! பிரதமர் மோடியுடன் சந்திப்பா?

  • IndiaGlitz, [Monday,November 06 2017]

பாரத பிரதமர் நரேந்திரமோடி இன்று சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்தில் நடைபெறும் தினந்தந்தி பவளவிழாவில் கலந்து கொள்கிறார். இன்னும் சற்று நேரத்தில் இந்த விழா தொடங்கவுள்ளது.

இந்த நிலையில் இதே நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொள்ளவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஒரே நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மற்றும் ரஜினிகாந்த் ஆகிய இருவரும் கலந்து கொள்வதால் இருவரும் சந்தித்து பேச வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ரஜினிகாந்த் விரைவில் அரசியல் கட்சி தொடங்கவிருப்பதாக கூறப்படும் நிலையில் இன்று மோடி-ரஜினி சந்திப்பு நடந்தால் அந்த சந்திப்பு முக்கியத்துவம் பெரும் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் இன்றைய தினந்தந்தி பவளவிழாவில் தமிழக ஆளுனர் பன்வாாிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நடிகர் பிரபு, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், நல்லக்கண்ணு, வாசன், சரத்குமார் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

More News

திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்கிறார் பிரதமர் மோடி

தினத்தந்தி பவளவிழா நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இன்று சென்னை வரும் பிரதமர் மோடி திமுக தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்து உடல்நலம் விசாரிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

ஒரு திரைப்படம் தணிக்கை செய்ய 68 நாட்களா? சீனுராமசாமி கண்டனம்

ஒரு திரைப்படம் தணிக்கை செய்வதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறை சமீபகாலமாக நடைமுறையில் இருந்து வரும் நிலையில் தற்போது தணிக்கை வாரியம் புதிய நிபந்தனை ஒன்றை வெளியிட்டுள்ளது.

பிரபுதேவாவின் 2ஆம் பாக படத்தில் நிக்கி கல்ராணி

பிரபுதேவா, பிரபு, காயத்ரி ரகுராம், உள்ளிட்ட பலர் நடித்த சார்லி சாப்லின் திரைப்படம் கடந்த 2002ஆம் ஆண்டு வெளியானது. இந்த நிலையில் 15 வருடங்களுக்கு பின்னர் இந்த படத்தின் 2ஆம் பாகம் தற்போது உருவாகவுள்ளது.

அமெரிக்க தேவாலயத்தில் மர்ம நபர் துப்பாக்கி சூடு: 27 பேர் பரிதாப பலி

அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள சர்ச் ஒன்றில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 27 பேர் பலியாகியுள்ளனர்.

சென்னை உள்பட 9 மாவட்டங்களுக்கு இன்றும் பள்ளிகள் விடுமுறை

சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருவதை அடுத்து கடந்த வாரம் முழுவதுமே பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.