மோடியும் அமித்ஷாவும் ஹிட்லர்-முசோலினி: ரஜினிக்கு பதிலடி கொடுத்த அரசியல்வாதி!

நேற்று நடைபெற்ற குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியபோது உள்துறை அமைச்சர் அமித்ஷா மட்டும் பிரதமர் மோடி ஆகிய இருவரும் கிருஷ்ணர் -அர்ஜுனன் போன்றவர்கள் என்றும் இதில் யார் கிருஷ்ணர், யார் அர்ஜூனன் என்பது அவர்களுக்கு மட்டுமே தெரியும் என்றும் பேசினார்.

ரஜினிகாந்த் என்ன பேசினாலும், அவருடைய பேச்சு இரண்டு நாட்களுக்கு பரபரப்பை ஏற்படுத்துவது வழக்கம். அந்த வகையில் ரஜினியின் இந்த பேச்சுக்கும் பல்வேறு தரப்பிலிருந்தும் ஆதரவு மற்றும் எதிர்ப்பு கருத்துக்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் இது குறித்து கருத்து கூறிய மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாலகிருஷ்ணன் என்பவர் 'மோடியும் அமித் ஷாவும் கிருஷ்ணர், அர்ஜூனன் என்று ரஜினிகாந்த் பேசினார். ஆனால் போக போக அவரே அமித்ஷா, மோடி ஆகிய இருவரும் கிருஷ்ணர், அர்ஜூனன் அல்ல, ஹிட்லரும் முசோலினியும் என்று புரிந்து கொள்வார் என்று பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

பாலகிருஷ்ணன் அவர்களின் இந்த கருத்துக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு கமெண்ட்டுகள் சமூக வலைதளங்களில் பதிவாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

More News

இது என்ன கிழக்கு சீமையிலே படமா? வீட்டுக்கு போங்க: ஹவுஸ்மேட்ஸ்களை வெளுத்து வாங்கும் வனிதா!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டே வாரங்கள் இருந்த வனிதா, அனைத்து போட்டியாளர்களையும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டு சென்ற நிலையில் தற்போது மீண்டும் சிறப்பு விருந்தினராக பிக்பாஸ் வீட்டிற்குள் வருகை தந்துள்ளார்.

இந்தியன் 2 படப்பிடிப்பில் கலந்து கொண்ட பிரபல நடிகை 

உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகவிருக்கும் 'இந்தியன் 2'  படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு இம்மாதம் தொடங்க உள்ளதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்

பிகில்-கென்னடி கிளப் படங்களின் கதைகள் ஒன்றா? சுசீந்திரன் விளக்கம்

கோலிவுட் திரையுலகில் கடந்த சில ஆண்டுகளாக விளையாட்டு சம்பந்தப்பட்ட திரைக்கதை அம்சங்கள் கொண்ட திரைப்படங்கள் அதிகமாக உருவாகி வருகிறது

பாகிஸ்தான் ரசிகையின் கேள்விக்கு பதிலடி கொடுத்த பிரியங்கா சோப்ரா

விஜய் நடித்த 'தமிழன்' உள்பட பல பாலிவுட், ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்து வரும் நடிகை பிரியங்கா சோப்ரா சமீபத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார்.

முதல் நாள் முதல் காட்சியை வீட்டில் இருந்தே பார்க்கலாம்: முகேஷ் அம்பானி அறிவிப்பு

இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ரிலையன்ஸ் நிறுவனத்தின் வருடாந்திர மாநாடு இன்று நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொண்ட ரிலையன்ஸ்