அவசர சட்டம் இல்லை. கைவிரித்தார் மோடி

  • IndiaGlitz, [Thursday,January 19 2017]

ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் இயற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று காலை டெல்லியில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்தார் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.
ஆனால் ஜல்லிக்கட்டு குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருப்பதால் உடனடியாக மத்திய அரசால் எதுவும் செய்ய முடியாது என்று மோடி முதல்வரிடம் தெரிவித்துள்ளதாகவும், இருப்பினும் தமிழக அரசுக்கு மத்திய அரசு துணை நிற்கும் என்று கூறியதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
முதல்வர் - பிரதமர் சந்திப்பில் ஜல்லிக்கட்டு குறித்து நல்ல முடிவு கிடைக்கும் என்று போராட்டக்காரர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருந்த நிலையில் வழக்கை காரணம் காட்டி பிரதமர் மோடி அவசர சட்டம் இயற்ற மறுப்பு தெரிவித்திருப்பது தமிழக மக்களுக்கும், போராட்டக்காரர்களுக்கும் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
பிரதமரின் இந்த முடிவால் தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் போராட்டம் மேலும் இன்னும் தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

அவசர சட்டம் வராவிட்டால் முதல்வரை முற்றுகையிடுவோம். பிரபல இயக்குனர்

ஜல்லிக்கட்டு போராட்டம் உச்ச கட்டத்தை எட்டியுள்ளதால் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் இன்று டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்துள்ளார்

ஜல்லிக்கட்டு பிரச்சனை: முதல்வரிடம் மோடி கூறியது என்ன?

தமிழகத்தில் இளைஞர்கள் நடத்தி வரும் ஜல்லிக்கட்டு போராட்டம் உச்சக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில் பாரத பிரதமர் நரேந்திர மோடியிடம் பேச்சுவார்த்தை நடத்த நேற்றிரவு தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்றார்

வெளிநாட்டு பானங்களை விற்க மாட்டோம். விழிப்புணர்வு பெற்ற வணிகர்கள்

வெளிநாட்டு பாங்களில் பூச்சி மருந்து கலந்துள்ளதால் அதை உபயோகிக்க வேண்டாம் என்று ஏற்கனவே பல ஆண்டுகளாக சமூக ஆர்வலர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் தற்போது ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைக்கும் வரை அந்நிய நாட்டு குளிர்பானங்களை வாங்கி விற்க மாட்டோம் என வணிகர்கள் அறிவித்து வருகிறனர். முதல்கட்டமாக தேனி ம

எனது மாநிலம் மீண்டும் எழுச்சி பெற்றுள்ளது. விஸ்வநாதன் ஆனந்த்

சென்னை மெரீனா கடற்கரை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டுக்காக இளைஞர்களின் எழுச்சி போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

'மிக்சர்' சாப்பிட்ட அந்த நடிகர் யார்? கே.எஸ்.ரவிகுமார் விளக்கம்

ரோம் நகரம் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தபோது அந்நாட்டு மன்னன் பிடில் வாசித்து கொண்டிருந்ததை போல ஜல்லிக்கட்டு பிரச்சனை தமிழகம் முழுவதும் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த நிலையில் தமிழகத்தின் முக்கிய பொறுப்பில் உள்ள ஒருவர் போராட்டத்தை கண்டுகொள்ளாமல் இருந்ததை, அவர் மிக்சர் சாப்பிடுவதை போல மீம்கள் சமூக வலைத்தளங்களில