பாரதிராஜா முதல் இளையராஜா வரை… பிரபலங்கள் இணைந்த வெப் தொடர்… புதிய அறிவிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
காதலும் காமெடியும் கலந்து எடுக்கப்பட்டு உலகம் முழுக்கவே பிரபலமான ‘மாடர்ன் லவ்‘ வெப் தொடர் தற்போது தமிழிலும் வெளியாகவுள்ளது. ஏற்கனவே இந்திய அளவில் தெலுங்கு மற்றும் இந்தியில் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது தமிழில் இந்த வெப் தொடர் வெளியாக இருக்கிறது.
6 வித்தியாசமான கதைகளைக் கொண்டு ஆந்தாலஜி முறையில் எடுக்கப்பட்ட மாடர்ன் லவ் வெப் தொடர் ஏற்கனவே இந்தியில் ‘மாடர்ன் லவ் மும்பை‘ என்ற பெயரிலும் தெலுங்கு மொழியில் ‘மாடர்ன் லவ் ஹைதராபாத்‘ என்ற பெரியலும் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தமிழ் மொழியில் ‘மாடர்ன் லவ் சென்னை‘ என்ற பெயரில் அமேசான் பிரைம் நிறுவனம் வெளியிட இருக்கிறது.
ஆந்தாலஜி முறையில் அமைந்த இந்த 6 கதைகளை இயக்குநர் ராஜு முருகன், பாலாஜி சக்திவேல், கிருஷ்ணராம் குமார், அஜய் சுந்தர், பாரதிராஜா, தியாகராஜன் குமாரராஜா ஆகியோர் இயக்கியுள்ளனர். இதற்கு ஷான் ரோல்டன், யுவன் சங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ் குமார், இளையராஜா ஆகியோர் இசையமைத்துள்ளனர். பிரபலங்கள் பலரும் இணைந்துள்ளதால் மாடர்ன் லவ் சென்னை வெப் தொடருக்கு அதிக எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.
கதை ‘லாலாகுண்டா பொம்மைகள்’ – இயக்குநர் ராஜு முருகன் – இசை ஷான் ரோல்டன்.
கதை ‘இமைகள்‘ – இயக்குநர் பாலாஜி சக்திவேல் – இசை யுவன்சங்கர் ராஜா.
கதை ‘காதல் என்பது கண்ணுல ஹார்ட் இருக்குற‘ – இயக்குநர் கிருஷ்ண ராம் குமார்- இசை ஜி.வி.பிரகாஷ் குமார்.
கதை ‘மார்கழி‘- இயக்குநர் அஜய் சுந்தர்- இசை இளையராஜா.
கதை ‘பறவை கூட்டில் வாழும் மான்கள்‘- இயக்குநர் பாரதிராஜா- இசை இளையராஜா.
கதை ‘நினைவோ ஒரு பறவை‘ - இயக்குநர் தியாகராஜன் குமாராராஜா- இசை இளையராஜா.
இதில் பிரபல நடிகர்கள் பலரும் இணைந்து நடித்துள்ளனர் என்பதால் ‘மாடர்ன் லவ் சென்னை’ வெப் தொடருக்கு ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ready to stumble upon love in the heart of Chennai?
— prime video IN (@PrimeVideoIN) May 8, 2023
🏠💙#ModernLoveOnPrime, May 18@tylerdurdenand1 #BharathiRaja @ilaiyaraaja #BalajiSakthivel @Dir_Rajumurugan @Krishnakum25249 @AkshaySundher #Thiagarajankumararaja @gvprakash @RSeanRoldan @ashokselvan @riturv pic.twitter.com/OptKjTFdJY
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments