புடினை “சைக்கோ“ என விமர்சித்த மாடல் அழகி.. சூட்கேசில் சடலமாக மீட்கப்பட்ட சோகம்!

  • IndiaGlitz, [Thursday,March 17 2022]

ரஷ்யாவில் பிரபல மாடல் அழகியாக வலம்வந்த ஒரு பெண் அந்நாட்டின் அதிபர் விளாடிமிர் புடினை “சைக்கோ, மனநலம் பாதிக்கப்பட்டவர்“ என்று தனது சோஷியல் மீடியா பக்கத்தில் கடுமையாக விமர்சித்து இருந்தார். அவர் தற்போது சூட்கேசில் சடலமாக மீட்கப்பட்டு உள்ளதால் கடும் பரபரப்பு ஏற்படுள்ளது.

23 வயதான மாடல் அழகி கிரெட்டா வெட்லர் கடந்த ஆண்டு புடினை விமர்சித்து தனது சோஷியல் மீடியா பக்கத்தில் கருத்து வெளியிட்டு இருந்தார். இந்தப் பதிவிற்கு ஏராளமான பாராட்டுகள் குவிந்துவந்த நிலையில் அவர் திடீரென்று தனது சோஷியல் மீடியா பக்கத்தில் எந்தப் பதிவையும் போடாமல் இருந்துவந்துள்ளார். இதனால் புடின் அரசு அவரை கைது செய்திருக்கும் எனத் தகவல்கள் வெளியாகி இருந்தன.

ஆனால் கிரெட்டா வெட்லர் சமீபத்தில் சாலையில் கிடந்த ஒரு சூட்கேசில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதனால் அவரைக் கொலை செய்தது யார்? புடினால் அவர் கொலை செய்யப்பட்டு இருப்பாரா? என்று பலரும் விமர்சித்த வந்த நிலையில் கிரெட்டாவின் காதலர் டிமிட்ரி கொரோ அவராகவே சரணடைந்துள்ளார். கிரெட்டாவிற்கும் தனக்கும் ஏற்பட்ட சண்டை காரணமாக அவரை நான் கொலை செய்துவிட்டேன். மேலும் சடலத்துடன் 3 நாட்கள் சுற்றியழைந்தேன் என்றும் ஒப்புக்கொண்டுள்ளார்.

ஏற்கனவே உக்ரைன் விவகாரம் தொடர்பாக உலக நாடுகள் முழுக்க புடின் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார். இந்நிலையில் கிரெட்டா வெட்லரின் கொலை வழக்கு குறித்த தகவல்கள் வெளியாகி பலரும் புடினை விமர்சித்து வருகின்றனர். ஆனால் அந்த கொலை வழக்கில் கிரெட்டாவின் காதலர் டிமிட்ரி கொரோ கைது செய்யப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

எனக்கு ஒரு செயற்கை கையை பொருத்த முடியுமா? கண்கலங்க வைத்த உக்ரைன் சிறுமி!

உக்ரைன் நாட்டில் ரஷ்ய இராணுவம் 22 நாட்களைக் கடந்த பிறகும் கடுமையான இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு

குக் வித் கோமாளி தாமு செஞ்ச காரியத்தை பார்த்திங்களா? வைரல் வீடியோ

ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நடுவர்களில் ஒருவராக இருக்கும் தாமு, அரபி குத்து பாடலுக்கு செம டான்ஸ் ஆடி உள்ள வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 

வெற்றிமாறனின் உதவி இயக்குனராக இணைந்த முன்னாள் தமிழக எம்.எல்.ஏ!

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான வெற்றி மாறனிடம் முன்னாள் எம்எல்ஏ ஒருவர் உதவி இயக்குனராக இணைந்து உள்ளார் என்ற தகவல் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது .

விஜய், அஜித் இருவரும் சேர்ந்தார் போல் இருக்கிறார் விஜித்: தங்கர்பச்சானின் டக்குமுக்கு திக்கு தாளம் இசை விழா

பிஎஸ்என் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் ஜார்ஜ் டயஸ், சரவணராஜா இணைந்து தயாரிக்க,  தங்கர்பச்சான் இயக்கத்தில் டக்கு முக்கு டிக்குதாளம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட

பெண் உசேன்போல்ட் பி.டி.உஷாவின் சாதனையை முறியடித்த திருச்சி வீராங்கனை… குவியும் வாழ்த்து!

தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயதான தடகள வீராங்கனை தனலட்சுமி சேகர் என்பவர் இந்தியாவின் பெண்