மாடல் அழகியிடம் மயங்கி குளியலறையில் சிக்கிய நபர்! ஏலகிரியில் பரபரப்பு

  • IndiaGlitz, [Friday,March 15 2019]

கிருஷ்ணகிரியை சேர்ந்த சக்திவேல் என்பவரின் மனைவி உடல்நலக்குறைவாக இருந்ததால் அவர் பாலியல் புரோக்கர் தொழில் செய்யும் சீனு என்பவரின் பழக்கத்தால் பல பெண்களுடன் தொடர்பில் இருந்தார். சீனு, சக்திவேல் நட்பு நெருக்கமானதை அடுத்து சீனுவின் உறவினர் ஒருவருக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.2 லட்சம் சக்திவேல் பெற்றுள்ளார்

இந்த நிலையில் சீனுவின் ஏற்பட்டால் மாடல் அழகி ஸ்வேதா என்பவரை அழைத்து கொண்டு ஏலகிரிக்கு தனது காரில் சென்றார் சக்திவேல் அங்கிருந்த லாட்ஜ் ஒன்றில் ரூம் எடுத்து இருவரும் தங்கினர். லாட்ஜியில் சக்திவேல் குளியலறைக்கு சென்றபோது, மாடல் அழகி ஸ்வேதா, சக்திவேலின் பணம் மற்றும் கார் சாவியை எடுத்து கொண்டு சக்திவேலின் காருடன் தப்பிவிட்டார்.

பின்னர் இதுகுறித்த தகவல் அறிந்து குளியலறையில் சிக்கியிருந்த சக்திவேலை மீட்ட போலீசார் விசாரணை செய்தனர். அப்போது சக்திவேலின் மொபைல் போனுக்கு ஒரு மெசேஜ் வந்தது. அதில் தன்னிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி வாங்கிய ரூ.2 லட்சத்தை திருப்பி கொடுத்துவிட்டு காரை பெற்று செல்லவும் என சீனு மெசேஜ் அனுப்பியிருந்தார். அப்போதுதான் மாடல் அழகி ஸ்வேதாவும் சீனுவும் சக்திவேலின் காரை திட்டமிட்டு கடத்தியது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தலைமறைவாக இருக்கும் ஸ்வேதா, சீனுவை தேடி வருகின்றனர்.