கவர்ச்சி நடிகை போல் மாற ஆசைப்பட்டு அறுவை சிகிச்சை செய்த மாடல் அழகி மரணம்..!

  • IndiaGlitz, [Saturday,April 29 2023]

பிரபல ஹாலிவுட் கவர்ச்சி நடிகை போல் மாற ஆசைப்பட்டு அறுவை சிகிச்சை செய்த இளம் மாடல் அழகி திடீரென மரணம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஹாலிவுட் திரையுலகில் கவர்ச்சி நடிகை கிம் கர்தர்ஷியான் தனது உடலை ஃபிட்டாக வைத்திருப்பார் என்பதும் அவரைப் போல முக அமைப்பு மற்றும் உடலமைப்பு வேண்டும் என பல பெண்கள் ஆசைப்பட்டு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைகள் செய்து வருவது போன்ற செய்திகள் வெளியாகி வருகின்றன.

இந்த நிலையில் கிம் கர்தர்ஷியான் போல் மாற வேண்டும் என்ற ஆசைப்பட்ட கிறிஸ்டினா என்ற மாடல் அழகி பல பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைகளை செய்து கொண்டதாக தெரிகிறது. இதனால் அவருக்கு உடல் நலம் பாதித்ததை அடுத்து சமீபத்தில் அவர் காலமானார்.

34 வயதான கிறிஸ்டினா மாரடைப்பால் இறந்ததாக கூறப்பட்டாலும் பிளாஸ்டிக் சர்ஜரி செய்த போது ஏற்பட்ட தவறு காரணமாக அவர் இறந்திருக்கலாம் என அவரது குடும்பத்தினர் கூறி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.