திமிங்கலத்தின் வாந்தியால் ரூ.25 கோடிக்கு சொந்தக்காரரான மீனவன்… நெகிழ்ச்சி சம்பவம்!!!

  • IndiaGlitz, [Wednesday,December 02 2020]

 

வாந்தி என்ற சொல்லை நினைத்தாலே எல்லோருக்கும் குமட்டிக் கொண்டுதான் வரும். ஆனால் தாய்லாந்து நாட்டில் உள்ள ஒரு மீனவன் இதேபோன்ற ஒரு வாந்தியால் ரூ.25 கோடிக்கு சொந்தக்காரராக மாறி இருக்கிறார். இச்சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பொதுவாக திமிங்கலங்கள் வாந்தி எடுக்கும்போது அதன் செரிமானத்திற்காக உதவும் ஆசிட் (அம்பெர்கிரிஸ் whale Voimit) போன்ற ஒரு பொருளை கக்கி விடுமாம். அப்படி கக்கும் பொருளில் வாசனையே இல்லாத ஆல்கஹால் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த வாசனையே இல்லாத அம்பெர்கிரிஸ் எனும் பொருளானது மிக தரமான பிராண்டட் பொருள்களின் வாசனைக்குப் பயன்படுத்தப் படுகிறாம். இதனால் அந்தப் பொருள்களின் வாசனை பல வருடங்களுக்கு மாறாமல் பாதுகாத்துக் கொள்ள முடியும் எனவும் கூறப்படுகிறது. இப்படி விலையுயர்ந்த பிராண்டட் பொருட்களுக்கு பயன்படுத்தப்படும் திமிங்கலத்தின் வாந்திக்கு எப்போதும் மார்க்கெட்டில் மவுசு அதிகம் எனவும் கருதப்படுகிறது.

ஒரு கிலோ தரமான அம்பெர்கிரிஸ் கிட்டத்தட்ட இந்திய மதிப்பில் 23,740 ரூபாய்க்கு விற்கப்படுகிறதாம். இந்நிலையில் தாய்லாந்து நாட்டில் மீன்பிடிக்கும் தொழிலை செய்துவரும் நரிஸ் சுவான் சாங் எனும் நபர் சுமார் 100 கிலோ அம்பெர்கிரிஸ் உருண்டை முதல் இன்னும் பல உருண்டைகளை சேகரித்து வைத்திருக்கிறார். இதனால் அதன் ஒட்டுமொத்த மதிப்பு ரூ.25 கோடிக்குத் தேரும் எனவும் கணிக்கப்பட்டு உள்ளது.

எப்போதும் போல கடற்கரைக்கு சென்ற நரிஸ் அங்கு வித்தியாசமான உருண்டைகளை பார்த்ததோடு அதுஎன்னவென்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் வீட்டிற்கு எடுத்துச் சென்றிருக்கிறார். அப்போதுதான் அவருக்கு தெரிந்து இருக்கிறது. இது திமிங்கலத்தின் வாந்தியால் கிடைக்கும் விலையுயர்ந்த பொருள் என்று. எனவே அதை விற்பதற்கான ஏற்பாடுகளை தற்போது செய்து வருவதாக செய்தியாளர்களிடம் கூறியிருக்கிறார். அதிஷ்டம் எந்த ரூபத்தில் வேண்டுமானாலும் வரலாம் எனப் பொதுவாகக் கூறப்படுவது உண்டு. அப்படித்தான் திமிங்கலத்தின் வாந்தியால் ஒரு நாளைக்கு 500 பவுண்டுகளை மட்டுமே சம்பாதிக்கும் நரிஸ் இப்போது 25 கோடிக்கு செந்தக்காரராக மாறப்போகிறார்.