இளைஞரின் சிறுநீர் பையில் செல்போன் சார்ஜர்: சுய இன்பத்தால் ஏற்பட்ட விளைவு

  • IndiaGlitz, [Saturday,June 06 2020]

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தான் தெரியாமல் செல்போன் சார்ஜரை விழுங்கி விட்டதாகவும் இதனால் தனக்கு தாங்க முடியாத வயிற்று வலி இருப்பதாகவும் கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவரது வயிற்றில் சார்ஜர் இல்லாததால் குழப்பம் அடைந்தனர்

இதனையடுத்து அவருக்கு எண்டாஸ்கோப்பி எடுத்துப் பார்த்த மருத்துவர்கள் அவரது வயிற்றில் மற்றும் குடல் பகுதியில் எந்த சார்ஜர் இல்லை என்பதை அறிந்து குழப்பமடைந்தனர். மேலும் அவருக்கு வயிற்றில் அறுவை சிகிச்சை செய்து தேடியபோதும், சார்ஜர் கிடைக்கவில்லை. இதனையடுத்து அறுவை சிகிச்சை செய்யும் இடத்திலேயே மீண்டும் அவருக்கு எக்ஸ்ரே செய்து பார்த்த போதுதான் அவர் விழுங்கியதாக கூறப்பட்ட செல்போன் சார்ஜர் சிறுநீர் பையில் இருப்பதை கண்டுபிடித்தனர். இதனை அடுத்து அதிர்ச்சி அடைந்த டாக்டர்கள் உடனடியாக அறுவை சிகிச்சை செய்து சிறுநீர் பையில் இருந்த செல்போன் சார்ந்த வெளியே எடுத்தனர்

இதுகுறித்து மருத்துவர்கள் கூறும் போது ’அந்த இளைஞர் வாய்வழியாக செல்போன் சார்ஜரை விழுங்கி இருக்க வாய்ப்பே இல்லை என்றும், அவர் சுய இன்பம் செய்வதற்காக செல்போன் சார்ஜரை ஆணுறுப்பில் பயன்படுத்தி இருப்பார் என்றும் அப்போது அது உள்ளே சென்று இருக்கும் என்றும், அவர் இதனை முதலிலேயே உண்மையை கூறி இருந்தால் அறுவை சிகிச்சையை தவிர்த்து இருக்கலாம் என்றும், எங்கள் வேலையும் எளிதாக முடிந்திருக்கும் என்று கூறியுள்ளார்.

மேலும் ஒருசில பொருட்களை பயன்படுத்தி சுய இன்பம் செய்வதை புத்தகத்தில் தான் படித்து இருப்பதாகவும், ஆனால் தனது 25 வருட அனுபவத்தில் இது போன்ற ஒரு சம்பவத்தை நேரில் பார்த்ததே இல்லை என்று அவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது