சார்ஜ் போட்டு வீடியோகால் பேசிய பெண்: மொபைல் வெடித்ததால் ஏற்பட்ட விபரீதம்

  • IndiaGlitz, [Tuesday,April 28 2020]

சார்ஜ் போட்டு கொண்டே மொபைல் போனில் பேசக்கூடாது என்றும், இதுபோன்று பேசினால் மொபைல் வெடித்து விபரீதம் ஏற்பட்டுள்ள பல சம்பவங்கள் நடந்துள்ளது என்று தெரிந்தும் திருவாரூரை சேர்ந்த பெண் ஒருவர் சார்ஜ் போட்டு கொண்டே வீடியோகாலில் பேசியதால் அவருக்கு பெரும் விபரீதம் ஏற்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் என்ற பகுதியை சேர்ந்த சுகுமார் என்பவர் வெளிநாட்டில் பணி புரிந்து வரும் நிலையில் அவருடைய மகள் ஆர்த்தி, நேற்று காலை தனது தந்தையுடன், செல்போனில் வீடியோ கால் மூலம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவருடைய செல்போன் சார்ஜில் இருந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் திடீரென பலத்த சப்தத்துடன் செல்போன் வெடித்ததால், செல்போனின் உடைந்த பாகங்கள் ஆர்த்தியின் கண் மற்றும் காதுக்குள் சென்றன. இதனால், வலியில் அலறித்துடித்த ஆர்த்தியை அவரது குடும்பத்தினர் அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அவருக்கு முதலுதவி மட்டும் அளிக்கப்பட்டு தஞ்சை மருத்துவமனைக்கு மருத்துவர்கள் அனுப்பி வைத்தனர். தற்போது அவருக்கு கண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தொடரந்து அவர் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News

நாங்கள்‌ எங்கள் கருத்தில் உறுதியாகவே இருக்கிறோம்: தஞ்சை கோவில் சர்ச்சை குறித்து சூர்யாவின் அறிக்கை

கடந்த சில நாட்களாக ஜோதிகா பேசிய தஞ்சை பெரிய கோவில் குறித்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் இந்த பரபரப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்கும்

எல்லா கேள்விகளும் பெண்களுக்கு மட்டும்தானா? அமலாபால் ஆவேச கேள்வி

தமிழ் திரையுலகின் முன்னனி நடிகைகளில் ஒருவரான அமலாபால் தனது சமூக வலைத்தளத்தில் கேள்விகள் எல்லாம் பெண்களை நோக்கியே வருவதாகவும் ஆண்களிடம்

'பொன்மகள் வந்தாள்' விவகாரம்: கலைப்புலி எஸ் தாணுவின் வேண்டுகோள்

ஜோதிகா நடித்த 'பொன்மகள் வந்தாள்' திரைப்படம் நேரடியாக ஓடிடி பிளாட்பார்மில் ரிலீஸ் ஆகவிருப்பதால் திரையரங்கு உரிமையாளர்கள் சூர்யா மற்றும் அவரை சேர்ந்தவர்களுக்கு தடை விதித்து இருப்பது குறித்து எஸ் தாணு

கடவுளே எனக்கு பதில் அளித்துவிட்டார்: ஹரிஷ் கல்யாண் உற்சாகம்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்று அதன் பின்னர் திரையுலகில் தொடர் வெற்றியை பெற்று வரும் நடிகர்களில் ஒருவர் ஹரிஷ் கல்யாண். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான 'தாராளப் பிரபு'

கொரோனா பாதிப்பால் உயிரிழந்த உலகப் பிரபலங்கள்!!!

உலகில் பல முக்கிய அரசியல் தலைவர்கள், கட்சி உறுப்பினர்கள், அமைச்சர்கள் உட்பட பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்