தியேட்டரில் உணவு பொருட்களை அதிக விலைக்கு விற்றவரை தாக்கிய அரசியல்வாதி
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் தியேட்டர் கட்டணம், பார்க்கிங் கட்டணம் அதிகரிக்கப்பட்டது தெரிந்ததே. இத்துடன் சேர்த்து ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்தால் அதற்கு வேறு தனிக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த ஆன்லைன் கட்டணங்கள் ஜூன் 1 முதல் குறைக்கப்படும் என்று கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் காற்றில் பறக்கப்பட்டுவிட்டதாக தெரிகிறது.
இந்த நிலையில் படம் பார்க்க வருபவர்களை அதிர்ச்சி அடைய செய்வது தியேட்டர் கேண்டீனில் விற்கப்படும் உணவுப்பொருட்களின் விலைகள் தான். வெளியே உள்ள விலையை விட பலமடங்கு அதிகம் தியேட்டர் கேண்டீனில் விற்கப்படுகிறது. இதனால் படம் பார்க்க வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.
இந்த நிலையில் புனேவில் உள்ள ஒரு திரையரங்கில் உணவு பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதை அறிந்து அந்த தியேட்டருக்கு சென்ற ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிர நவ நிர்மான் சேனா கட்சியினர் தியேட்டர் மேலாளரை கன்னத்தில் அறைந்து தாக்கினர். மேலாளரை மகாராஷ்டிர நவ நிர்மான் சேனா கட்சியினர் தாக்கிய வீடியோ சமூக இணையதளங்களில் வைரலாகி வருகிறது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout