சி.கே.குமரவேல் விலகல்: மக்கள் நீதி கட்சி விளக்கம்

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து அக்கட்சியின் பிரமுகர் சி.கே.குமரவேல் விலகியுள்ள நிலையில் இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த விளக்க அறிக்கையில், 'நேர்காணலுக்கு கூட வராமல், தேர்தலில் தான் கடலூர் தொகுதியில் போட்டியிடுவதாக சி.கே.குமரவேல் அறிவித்தது கட்சி கட்டுப்பாடுகளுக்கு முரணான செயல் என்றும், ஜனநாயக முறைப்படி நடைபெற்ற வேட்பாளர் தேர்வு முறைக்கு எதிராக செயல்பட்டதால் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைமை அவரின் ராஜினாமாவை ஏற்றுக்கொள்வதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து குமாரவேலிடம் விளக்கம் கேட்கப்பட்டதாகவும், அந்த விளக்கம் ஏற்றுக்கொள்ளும் வகையில் இல்லாததால் சி.கே.குமரவேல் ராஜினாமாவை கட்சி ஏற்றுக்கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

More News

தேர்தல் 2019: நடிகை ரோஜாவுடன் மோதும் விஜயகாந்த் பட நடிகை?

நாடு முழுவதும் ஏப்ரல், மே மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஆந்திர பிரதேச மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலும் நடைபெறவுள்ளது,

திமுகவில் இணையும் முன்னாள் அதிமுக அமைச்சர்

1991 முதல் 1996 வரை ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது  பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பன் அ.தி.மு.க.வில் இருந்து விலகியுள்ளார். 

கமல் கட்சியின் முக்கிய நிர்வாகி திடீர் விலகல்! நடிகையுடன் கருத்துவேறுபாடு காரணமா?

மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழு உறுப்பினர் குமாரவேல் என்பவர் அக்கட்சியிலிருந்து விலகுவதாக கமல்ஹாசனிடம் கடிதம் வழங்கியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது

தேமுதிகவின் 4 தொகுதி வேட்பாளர்கள் இவர்கள்தான்!

அதிமுக கூட்டணியில் பெரும் பரபரப்புக்கு பின்னர் இணைந்த தேமுதிக, 4 தொகுதிகளை மட்டும் வேண்டா வெறுப்புடனும் வேறு வழியின்றியும் பெற்றது.

சிவகார்த்திகேயன் அடுத்த படத்தின் முக்கிய அறிவிப்பு

'மிஸ்டர் லோக்கல்' படத்தை அடுத்து சிவகார்த்திகேயன் தற்போது இயக்குனர் ரவிகுமார் இயக்கும் படத்திலும், பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் ஒரு திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.