இடைத்தேர்தலில் போட்டி இல்லை: கமல்ஹாசன் அறிவிப்பு

  • IndiaGlitz, [Sunday,September 22 2019]

நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளுக்கு அக்டோபர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் இந்த தேர்தலை சந்திக்க திமுக, அதிமுக கூட்டணி கட்சிகள் தயாராகி வருகின்றன.

இந்த நிலையில் நேற்று இடைத்தேர்தல் தேதி அறிவித்த அடுத்த சில நிமிடங்களில் இடைத்தேர்தலில் தங்கள் கட்சி போட்டியிடவில்லை என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்தார். இதனையடுத்து கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடுமா? என்ற கேள்வி பலரது மனதில் எழுந்தது.

இந்த நிலையில் நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தலில் மக்கள் நீதிமய்யம் போட்டியிடாது என சற்றுமுன் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பழைய கொள்ளையர்‌ கட்சிகளையும்‌, அதன்‌ கூட்டுப்‌ பங்காளிகளையும்‌, பெருவாரி மக்களின்‌ எண்ணப்படி ஆட்சியிலிருந்து அகற்றி, 2021ல்‌ ஆட்சிப்‌ பொறுப்பினை மக்களின்‌ பேராதரவுடன்‌ கைப்பற்றி மக்களாட்சிக்கு வழி வகுக்கும்‌ முனைப்போடு மக்கள்‌ நீதி மய்யம்‌ கட்சி விரைவாக முன்னேறி வருகிறது.

நாங்குநேரியிலும்‌ விக்கிரவாண்டியிலும்‌, தங்கள்‌ தலைவர்களையும்‌ அவர்களின்‌ தலைப்பாகைகளையுமாவது தக்க வைத்துக்கொள்ளலாம்‌ என்கின்ற எண்ணத்துடன்‌, ஆட்சியிலிருந்தவர்களும்‌ ஆள்பவர்களும்‌ போடும்‌ இடைத்தேர்தல்‌ எனும்‌ இந்த ஊழல்‌ நாடகத்தில்‌ மக்கள்‌ நீதி மய்யம்‌ பங்கெடுக்காது. இவ்வாறு கமல்ஹாசன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.