மநீம முக்கிய தலை.....நாளை திமுக-விற்கு இடம்பெயருகிறது...!
Send us your feedback to audioarticles@vaarta.com
கமல்ஹாசன் அவர்களின் மக்கள் நீதி மய்யத்தில், முக்கிய புள்ளியாக இருந்த திரு.மகேந்திரன் அவர்கள், நாளை திமுக-வில் இணையவுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
மக்கள் நீதி மய்யம் கட்சியில் துணைத்தலைவராக இருந்து, அக்கட்சிக்காக சிறப்பாக பணியாற்றியவர் கோவையைச் சேர்ந்த மகேந்திரன் அவர்கள். கடந்த 2019-இல் நடைபெற்ற லோக்சபா தேர்தலின் போது, 1.44 லட்சம் வாக்குகளை பெற்று, தமிழக அரசியல் கட்சியினரை ஆச்சரியப்பட வைத்தார். இதேபோல் அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலிலும், சிங்காநல்லூர் தொகுதியில் களமிறங்கி பெருவாரியான வாக்குகளை பெற்றார்.
ஆனால் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், மக்கள் நீதி மய்யம் எந்த தொகுதியிலும் வெற்றிபெறவில்லை. கோவை தெற்கு தொகுதியில் கமல் முன்னிலை வகித்து வந்த நிலையில், இறுதியில் பாஜக, வானதி ஸ்ரீனிவாசன் 1,358 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதைத்தொடர்ந்து கட்சியில் முக்கிய பதவி வகித்து வந்த துணை தலைவர்கள் மகேந்திரன், பொன்ராஜ், பொதுச்செயலர் குமாரவேல், தலைமை அலுவலக பொது செயலரும், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ்பாபு, சமூக ஆர்வலர் பத்மபிரியா உள்ளிட்டோர் ஒவ்வொருவராக கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகினார்கள்.
இந்நிலையில் மகேந்திரன் திமுக-வில் இணையவிருப்பதாக செய்திகள் சமீபத்தில் வெளியானது. இவருக்கு தமிழ்நாடு தொழில்துறை வளர்ச்சி கழகத்தின் (TIDCO) சேர்மன், பதவி கொடுக்க இருப்பதாகவும் பேசப்படுகிறது. மேற்கு மண்டலம் முழுவதையும் அதிமுக கைப்பற்றி விட்டதால், இந்த நிலைமையை மாற்ற ஸ்டாலின் கடுமையாக போராடி வருகிறார். அதற்காக உள்ளூர் நிர்வாகிகளை முன்னேற்றுவதில், திமுக தலைமை முக்கிய பங்கெடுத்து வருகிறது. இதனால் கோவை மண்டலத்தில் செல்வாக்கு உள்ள, மகேந்திரன் அவர்களுக்கு திமுகவில் சேர்மன் பதவி கொடுக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து நாளை தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், திமுக -வில் இணையவுள்ளார் மகேந்திரன். இவருடன் கோவை மாவட்ட ஆதரவாளர்கள் சுமார் 5000 பேரும் திராவிட முன்னேற்ற கழகத்தில் இணையவுள்ளதாக செய்திகள் கூறுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout