கமல் கட்சியில் இருந்து விலகிய இன்னொரு பிரமுகர்: இம்முறை யார் தெரியுமா?

கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணியை அடுத்து மூன்றாவது கூட்டணியாக போட்டியிட்டது. இந்த கூட்டணி ஓரளவு வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கமல்ஹாசன் உள்பட அந்த கட்சியின் அனைத்து வேட்பாளர்களும் தோல்வி அடைந்தனர் என்பதும், பெரும்பாலானோர் டெபாசிட் இழந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தேர்தல் முடிந்தவுடன் மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து நிர்வாகிகள் ஒவ்வொருவராக விலகத் தொடங்கினர். முதலில் துணை தலைவர் டாக்டர் மகேந்திரன் அதன்பின் சந்தோஷ் பாபு, பத்மபிரியா உள்ளிட்டோர் கட்சியில் இருந்து விலகினார்கள்.

இந்தநிலையில் மேலும் சிலர் விலக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்ட நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி மக்கள் நீதி மய்யம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் முருகானந்தம் அறிவித்துள்ளார். இதனால் கட்சித் தொண்டர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

More News

கமல்கிட்ட சாரி சொன்னேன்… பெருந்தன்மை கொண்ட பாஜக எம்எல்ஏவின் உருக்கமான வீடியோ!

தமிழகத்தில் கடந்த 20 வருடங்களுக்குப் பிறகு பாஜக 4 தொகுதிகளில் வெற்றிப் பெற்றுள்ளது.

ஓப்பனா வரவு கணக்கு சொன்ன முதல்வர்… நன்கொடை விஷயத்தில் குவியும் பாராட்டு!

இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை பீதியைக் கிளப்புகிறது.

பல்ஸ் ஆக்சி மீட்டரை பயன்படுத்துவது எப்படி? விளக்க முறை!

கொரோனா வைரஸ் தொற்று முதலில் மனித நுரையீரலில் பாதிப்பை  ஏற்படுத்துகிறது.

அனைவரும் தடுப்பூசி போட சீனுராமசாமி, குஷ்பு தெரிவித்த ஆலோசனைகள்!

தடுப்பூசி போட்டால் சன்மானம் தரவேண்டும் என இயக்குனர் சீனுராமசாமி கூறியிருக்கும் நிலையில் தடுப்பூசி போட்டால் மட்டுமே ரேஷன் பொருட்கள் வழங்க வேண்டும் என குஷ்பு தெரிவித்து இருப்பது

விஜயகாந்த் உடல்நலம் குறித்து தேமுதிக அறிக்கை!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் இன்று அதிகாலை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து அவரது உடல்நிலை குறித்து தேமுதிக தலைமைக் கழகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது