மேலும் 2 நிர்வாகிகள் ராஜினாமா? என்ன நடக்கின்றது கமல் கட்சியில்?

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து கருத்துவேறுபாடு காரணமாக சமீபத்தில் அக்கட்சியின் செயற்குழு உறுப்பினர்களில் ஒருவரான குமரவேல் விலகினார். அவர் அளித்த பேட்டியில், கட்சியில் சிலர் கமலை மீறி அதிகாரம் செலுத்துவதாகவும், கட்சியில் ஜனநாயகம் இல்லை என்றும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் குமரவேல் விலகலை தொடர்ந்து மேலும் இரண்டு முக்கிய நிர்வாகிகள் தற்போது கமல் கட்சியில் இருந்து விலகியுள்ளனர். மக்கள் நீதி மய்யம் கட்சியின் நெல்லை மத்திய மாவட்ட பொறுப்பாளர் செந்தில்குமார் மற்றும் நெல்லை மேற்கு மாவட்ட பொறுப்பாளர் கருணாகர ராஜா ஆகிய இருவரும் தங்களது பொறுப்பை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளனர். மேலும் விருதுநகர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் சீனிவாசகம் என்பவரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திராவிட கட்சிகளுக்கு மாற்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி, வரும் தேர்தலில் பெறும் வாக்குகளை வைத்தே அதன் எதிர்காலம் இருக்கும் என்று கூறப்படும் நிலையில் தொடர்ந்து அக்கட்சியில் இருந்து நிர்வாகிகள் விலகி வருவது ஒரு பின்னடைவாகவே கருதப்படுகிறது.

More News

நான் கர்ப்பம் என்று எனக்கே தெரியாது: எமி ஜாக்சன்

ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கிய '2.0' திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த நடிகை எமிஜாக்சன் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்தார்.

சென்னை திரும்பிய 'நேர்கொண்ட பார்வை' டீம்: அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

கடந்த சில வாரங்களாக ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராம் பிலிம் சிட்டியில் அஜித்தின் 'நேர்கொண்ட பார்வை' திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது.

ராஜு முருகனின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

பிரபல எழுத்தாளரும் இயக்குனருமான ராஜூமுருகன் இயக்கிய 'ஜோக்கர்', 'ஜிப்ஸி' ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அவர் கதை வசனம் எழுதிய திரைப்படம் 'மெஹந்தி சர்க்கஸ்'.

முள்ளும் மலரும் படத்தில் நான் நடிப்பதாக இருந்தது: கமல்ஹாசன்

பழம்பெரும் திரைப்பட இயக்குனர் மகேந்திரன் இன்று காலை காலமான நிலையில் தமிழ் திரையுலகமே அவரது இல்லத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தியது.

நீட் தேர்வு-விவசாய கடன் ரத்து, ரபேல் விசாரணை: அதிரடியான காங்கிரஸ் தேர்தல் அறிக்கை

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சற்றுமுன் அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.