மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் பட்டியல் எப்போது? புதிய அறிவிப்பு

மக்களவை தேர்தல் தமிழகத்தில் வரும் 18ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இந்த நிலையில் இந்த தேர்தலில் போட்டியிடும் அதிமுக, திமுக, பாமக, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்பட ஒருசில கட்சிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் பரபரப்பு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் கட்சி தொடங்கிய ஒரே வருடத்தில் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டி என்று தைரியமான முடிவை எடுத்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி, மார்ச் 20ஆம் தேதி மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளது

அன்றைய தினமே கமல்ஹாசன் போட்டியிடும் தொகுதியும் அறிவிக்கப்படும் என்பதால் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தொண்டர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் இந்த வேட்பாளர் பட்டியலை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.